12,000 கோடியில் மிலன்-2டி டேங்க் எதிர்ப்பு ஏவுகணை

12,000 கோடியில் மிலன்-2டி டேங்க் எதிர்ப்பு ஏவுகணை

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் தலைமையில் நடைபெற்ற  Defence Acquisition Council எனப்படும் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கூட்டத்தில் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

12,000 கோடியில் இந்த டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளது. Milan-2T anti-tank missiles தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இந்திய இராணுவத்திற்கு 70,000 different types of anti-tank guided missiles (ATGM) மற்றும் 850 different launchers அவசர தேவையாக உள்ளது.ஆனால் தற்போது 5,000 Milan 2T anti-tank guided missiles தான் வாங்கப்பட உள்ளது.இந்த ஏவுகணைகளை பிரான்ஸ் இந்தியாவிற்கு வழங்கும்.

இந்தியாவும் தனது சொந்த டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை மேம்படுத்தி வருகிறது இந்தியாவின்  Defence Research and Development Organisation நாக் டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

இந்திய இராணுவத்தின் அவசர தேவைக்காக இந்த மிலன் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன.எதிரியின் armoured division களை தாக்கி அழிக்க இந்த ஏவுகணை உதவும்.தவிர எல்லை பங்கர்கள் தகர்ப்பு உள்ளிட்டு நிறைய நடவடிக்கைகளுக்கு இந்த ஏவுகணைகளை பயன்படுத்த முடியும்.

இந்த ஏவுகணை இரண்டாம் தலைமுறை ஆகும்.

பல்வேறு போர்களில் பயன்படுத்தப்பட்டு அதன் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்தியா ஏற்கனவே மிலன் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை உபயோகிக்கிறது.மீண்டும் அவற்றை ஆர்டர் செய்வது அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதாய் அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published.