12 விமானிகளும்,துணை அதிகாரிகளும்: உண்மையான வீரர்கள்

12 விமானிகளும்,துணை அதிகாரிகளும்: உண்மையான வீரர்கள்

அந்த 12 விமானிகளும் அவர்களுக்கு துணையாக பணியாற்றி சப்போர்ட் அதிகாரிகளும்….

அந்த முகம் மறைக்கப்பட்ட அல்லது நாம் எப்போதும் அறியவே போகமலே போக கூடிய அந்த 12 வீர விமானிகள்.அவர்களாக அவர்கள் பணியில் இருந்து விடுபடும் போது நாங்கள் தான் அது என கூறலாம்.அல்லது கூறாமலும் போகலாம்.அவர்களின் அடையாளங்கள் தற்போது மறைக்கப்படுவது நன்று.ஆனால் அப்படியே போகவும் வாய்ப்புள்ளது.அவர்களுக்கு தேசக்கடமை அது.மற்றதெல்லாம் பின்பு தான்.

இந்த தாக்குதலுக்கு பிறகு அவர்கள் தங்கள் சாதாரண பணிக்கே திரும்புவர்.சாதாரண சிவிலியன்கள் போலவே அவர்கள் வாழ்க்கையை தொடருடர்.ஏதே  ஒரு மூலையில் தன் தேவைக்கு வரிசையில் நிற்கலாம்.

அவர்கள் பணிமாற்றம் செய்யப்படலாம்.அவர்களின் நடுத்தர வாழ்வு பாதிக்கப்படலாம்.
ஒரு நாள் பணியில் இருந்து ஓய்வு பெறுவர்.அவர்கள் சிரமமும் தொடரும்.

ஒரு நாள் பாலிவுட் அவர்களது சாகசத்தை படமாக எடுக்கலாம்.அன்றைய தினம் உண்மை வீரர்களின் நினைப்பு நம்மை விட்டு நீண்ட தூரம் செல்ல அவற்றில் நடித்தவர்கள் முகம் மட்டுமே மனதில் தங்கும்.இவையெல்லாம் அவர்கள் பார்க்கலாம் அமைதியாக…

அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படமாட்டது.எந்தவித அங்கீகாரமும் கிடைக்காமல் போகலாம்.ஏனெனில் இரகசியம் காக்கப்படும்.அவர்கள் அழைக்கப்பட்டால் மீண்டும் கூட களம் காண தயார்.

அந்த விமானிகளுக்கு வீரவணக்கம்

Leave a Reply

Your email address will not be published.