பெங்களூர்: விமான கண்காட்சி கார் பார்க்கிங் பகுதியில் தீவிபத்து 100 கார்கள் சேதம்

பெங்களூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி கார் பார்க்கிங் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது இதில் 100 கார்கள் சேதம் அடைந்தன.

பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ந் தேதி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்துகின்றன. இன்று கண்காட்சியின் 4-வது நாள் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

அப்போது கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கார்கள் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 100க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Daily thanthi

Leave a Reply

Your email address will not be published.