ஸ்ரீநகர் விரைந்த 100 கம்பெனி துணை ராணுவப் படை

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு, 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆகாய மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் ((Yasin Malik)) கைதை தொடர்ந்து தலைநகரில் பதற்றம் சூழ்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, அம்மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவசரமாக துணை ராணுவப் படையினரை அங்கு அனுப்பி வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதை அடுத்து 100க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவப் படையினர், ஆகாய மார்க்கமாக ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு கம்பெனி என்பது 80 முதல் 150 வீரர்களைக் கொண்ட குழுவாகும். 

Leave a Reply

Your email address will not be published.