சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் 10 நக்சலைட்கள் வீழ்த்தப்பட்டனர்
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் 10 நக்சலைட் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.
பிஜாபூர் மாவட்டம் பாய்ராம்கார் காவல் நிலையத்திற்கு உள்பட்ட காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையை நடத்தினர். அப்போது மறைந்து இருந்த நக்சலைட்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இருதரப்பு இடையே மோதல் வெடித்தது. இதில் 10 நக்சலைட்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுடைய சடலம், 11 துப்பாக்கிகளுடன் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மேலும் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.