புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கேரள வீரர் குறித்து உருக்கமான தகவல்

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கேரள வீரர் குறித்து உருக்கமான தகவல்

கேரளாவில் உள்ள தாயாரிடம் செல்போனில் பேசிய அடுத்த இரண்டு மணி நேரத்தில் வீரர் ஒருவர் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியான தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற அந்த வீரரும் தாக்குதலில் பலியானவர்களில் ஒருவர். வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

வசந்தகுமார் இறப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு தாயார் வசந்தாவுடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது ஜம்முவில் மிகவும் குளிராக இருப்பதாக கூறி உள்ளார். தாயாருடன் பேசிய 2 மணி நேரத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் வசந்தகுமார் பலியாகி இருப்பது அவரது குடும்பத்தினரை ஆறாத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.