ஜாட் ரெஜிமென்ட்

 ஜாட் ரெஜிமென்ட்

ஜாட் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் இன்பான்ட்ரி ரெஜிமென்ட் ஆகும்.இந்திய இராணுவத்தில் பலகாலமாக செயல்படும் ரெஜிமென்களில் இதுவும் ஒன்று மற்றும் அதிக வீரதீர விருதுகள் பெற்ற ரெஜிமென்களில் ஜாட் ரெஜிமென்டும் ஒன்றாகும். 19 பேட்டில் ஹானர்(battle honours) விருதுகளை  1839 முதல்  1947 வரை பெற்றுள்ளது.சுதந்திரத்திற்கு பிறகு 5  battle honours எட்டு மகா வீர் சக்ரா, எட்டு கீர்த்தி சக்ரா,32 சௌரியா சக்ரா, 39 வீர் சக்ரா மற்றும் 170 சேனா விருதுகளை பெற்றுள்ளது இந்த ரெஜிமென்ட்.

பஞ்சாப் ,சிந்து, ஹரியானா, ஜம்மு,இராஜஸ்தான் ,மேற்கு உத்திரப்பிரதேசத்தில் வாழும் ஒரு இன மக்கள் தான் இந்த ஜாட் இனத்தவர்.விவசாயமே  இவர்களின் தொழிலாக இருந்தாலும் வீரத்திற்கு குறைச்சல் இல்லை..தங்களது 200 ஆண்டுகால இராணுவ சரித்திரத்தில் முதல் உலகப்போர் உள்ளிட்ட பல போர்களில் பங்கேற்று வீரதீரத்தை நிரூபித்துள்ளனர்.

இவர்களின் வீரம் கண்டு பிரிட்டிசார் பெருமளவு இவர்களை படையில் சேர்த்தனர். ” ஜெய் பகவான் , ஜாட் பல்வான்” அதாவது ஜாட் பலமானவர்கள் ,கடவுளுக்கே வெற்றி என்பது இவர்களின் போர்க் குரலாக (1955)உள்ளது.ஜாட்டுகளில் இஸ்லாம் ,இந்து, சீக்கிய மதங்களை பின்பற்றினாலும் ஹரியானா மற்றும்  மேற்கு உத்திரப்பிரதேசத்தில் வசிக்கும் இந்துக்களே அதிகமாக படையில் இணைகின்றனர்.

ஜாட் ரெஜிமென்டுகளில பெரும்பாலும் இந்து ஜாட்டுகளே இணையும் பட்சத்தில் ஒரு சில பட்டாலியன்களில் வேறு சிலரும் இணைத்துக் கொள்ள படுகிறார்கள்.அதாவது

12வது பட்டாலியனில் அனைத்து சமூகத்தினரும் இணைத்துக் கொள்ள படுவர்.

15வது பட்டாலியனில் அஹிர்ஸ் ,ஜாட், குர்ஜார்ஸ் மற்றும் இராஜ்புத் சமூகத்தினர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

20வது பட்டாலியனில் ஜாட் ,கார்வாலி, மராத்திய சமூகத்தினர்கள் இணைத்துக் கொள்ளப் படுவர்.

9வது ஜாட் பட்டாலியன் சிறப்பு தாக்கும் படைப் பிரிவாக உள்ளது.
ஜாட் ரெஜிமென்டில் மொத்தம் 21 பட்டாலியன்கள் உள்ளன.தலைமையகம் உபியின் பரேய்லியில் உள்ளது.

ஜாட் வீரர்கள் நடத்திய ஒரு போர் ஒன்றை பார்க்கலாம்.

டோக்ராய் போர்

1965 போரில் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இந்த போரை 3வது ஜாட் வீரர்கள் நடத்தினர்.

அப்போது இந்தியப் படைகள் லாகூருக்கு அருகே போரிட்டு கொண்டிருந்தனர்.லாகூரை கைப்பற்ற வேண்டி படைகள் நகர்ந்தனர்.லாகூர் (பாகிஸ்தான்) முன் ஒரு கிமீ தொலைவில் இருந்தது தான் இந்த டோக்ராய் கிராமம். 6 செப்டம்பரில் இந்தியப் படைகள் டோக்ராயை கைப்பற்றினாலும் உதவிக்கு மேலதிக இந்தியப் படைகள் வர தாமதமானதால் டோக்ராயை விட்டு இந்தியப் படைகள் பின்வாங்க வேண்டியதாயிற்று.பாக் படைகள் டோக்ராயில் வலிமையான காலூன்றியிருந்தன.காரணம் டோக்ராய் வீழ்ந்தால் லாகூர் இந்தியப் படைகளின் கைகளில் விழுந்து விடும்.லாகூர் பாக்கின் பெரிய நகரங்களுன் ஒன்று என்பதால் பாக் தனது சக்திகளை திரட்டி டோக்ராயில் மையம் கொண்டிருந்தது.

மீண்டும் செப் 20 இரவில் இந்தியப் படையின் ஜாட் வீரர்கள் டோக்ராயை திரும்ப  கைப்பற்ற விரைந்தனர். பாக் படைகளை சிதறடித்து மீண்டும் ஜாட் வீரர்கள் டோக்ராயை கைப்பற்றினர். பிறகு லாகூர் வரை இந்தியப் படைகள் முன்னேறி லாகூரைக் கைப்பற்றி , போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பு படைகள் திரும்ப அழைக்கப்பட்டது வரலாறு.

இந்திய இராணுவ வரலாற்றில் டோக்ராய் போர் இரத்தம் தோய்ந்த கடும் போராக இருந்துள்ளது. துப்பாக்கி குண்டுகளில் ஆரம்பித்த போர் (3 ஜாட் வீரர்கள் (இந்தியா) ,16 பஞ்சாப்(பாக்)) கிரனேடு, கத்தி என கடைசியல் இரு நாட்டு வீரர்களும் வெறும் கையால் போரிட்டுள்ளனர்.(20,21செப்)

3 ஜாட் பட்டாலியனைச் சேர்ந்த 550 வீரர்கள் தங்களை விட இருமடங்கு பலம் மற்றும் டாங்க் உதவிகள் பெற்றிருந்த பாக்கின் 16 பஞ்சாப் வீரர்களை அங்கு எதிர்கொண்டனர். ஜாட்டுகளின்  திறமை மற்றும் அவர்களை வழிநடத்திய லெட் கலோனல் டெஷ்மன்ட் அவர்களின் திறமையும் இணைந்து பந்தாடி அவர்களின் கமாண்டிங் ஆபிசர் கலோ. கோல்வாலாவை கைது செய்தனர். அவரோடு இணைந்து பேட்டிரி கமாண்டர் ,மேலும் இரண்டு ஆபிசர், ஐந்து ஜேசிஓக்கள், 108 வீரர்கள் (உயிரோடு) கைது செய்தனர்.308 பாக் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தியா சார்பில் 86 வீரர்கள் வீரமரணம் அடைந்திருந்தனர்.

 22 செப் மதிய அளவில் இரு நாட்டு வீரர்களும் கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர். ஒரு கம்பெனியை சிதறடித்த இந்திய வீரர்கள் அவர்களை சரணடையச் செய்தனர்.மாலை 5 மணி அளவில் டோக்ராய் இந்தியப் படைகளின் கைக்குள் விழுந்தது.

போரில் வீரமிகு போரிட்ட ஜாட் வீரர்களுக்கு வீரதீர விருது வழங்கி பெருமை கொண்டது இந்தியா. 4 மகா வீர் சக்ரா, 7 சேனா விருது, 12  Mention in Dispatches மற்றும் 11 வீரர்களுக்கு COAS Commendation Card வழங்கப்பட்டது.

டோக்ராயை கைப்பற்ற வீரர்கள் சிரமம் கொண்டதற்கு காரணம் அதன் இயற்கையாவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கால்வாய் தான். ஆம் டோக்ராயை தொட அந்த கால்வாயை கடக்க வேண்டும் என்பதே பெரிய சவால் மிகுந்த பணியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.