அணுஆயுத நீர்மூழ்கிக்கு டோர்பிடோக்கள் வாங்க திட்டம்

அணுஆயுத நீர்மூழ்கிக்கு டோர்பிடோக்கள் வாங்க திட்டம்

ஏற்கனவே பல வருட தாமதத்திற்கு பிறகு  Defence Ministry  heavyweight torpedoe-க்களை வாங்க பேச உள்ளது.இந்த டோர்பிடோக்கள்  INS Arihant மற்றும் ஆறு Scorpene-class submarine-களுக்காக வாங்கப்படுகிறது.

இதற்கென உயர்மட்ட குழு கூடி
அரிகந்த் மற்றும் கல்வாரி வகை நீர்மூழ்கிகளுக்காக  heavy-weight torpedoes வாங்குவது குறித்து விவாதிக்க உள்ளது.
 Kalvari class நீர்மூழ்கிகள் என அழைக்கப்படும்  Scorpene submarine-கள் பிரான்ஸ் உதவியுடன் இந்தியாவின்  Mazagon Dockyards Limited நமது கடற்படைக்காக கட்டி வருகிறது.

இதற்கான  tender அறிவிப்பு மற்றும் டோர்பிடோக்கள் எண்ணிக்கை குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.

நமது  DRDO ஒரு  heavyweight torpedo ஐ மேம்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்து வருடங்களாக டோர்பிடோ வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏற்கனவே இத்தாலிய நிறுவனமான WASS இருந்து வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதன் பின் ஊழல் புகார்கள் காரணமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதிரியின் நீர்மூழ்கி மற்றும் போர்க்கப்பல்களுக்கு எதிராக நமது நீர்மூழ்கிகள் செயல்பட  heavyweight torpedoes அவசியம் ஆகும்.

நமது புதிய நீர்மூழ்கிகள் டோர்பிடோக்கள் இல்லாமல் இயங்குவது ஆபத்தே.தற்போது பழைய டோர்பிடோக்களை நம்பி தான் நீர்மூழ்கிகள் இயங்கி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published.