இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு திறன் எப்படி உள்ளது?

இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு திறன் எப்படி உள்ளது?

எதிரியின் மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் நடத்துவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியம் நமது நாட்டில் விழும் எதிரியின் ஏவுகணைகளை வழிமறிப்பது.ஏவுகணகளை இடைமறித்து அழிப்பது என்பது சாதாரண நிகழ்வல்ல.அதைவிட கடினம் பாலிஸ்டிக் ஏவுகணையை அழிப்பது.பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு அல்லது Ballistic missile defence (BMD ) இந்த இடைமறிக்கும் வேலையைச் செய்கிறது.

இந்தியாவிடம் இதுபோன்ற அமைப்பு உள்ளதா?

முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.இந்த பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு என்பது வெறும் ஒரே ஒரு ஏவுகணை மட்டுமல்ல.அந்த அமைப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏவுகணை வகைகள் இருக்கும்.ஒவ்வொரு ஏவுகணை வகையும் ஒரு செயல்பாடை கொண்டிருக்கும் என்றாலும் அவைகளின் குறிக்கோள் எதிரியின் பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்து வீழ்த்துவது.

இந்தியாவும் இதுபோன்றதொரு அமைப்பை ஏற்படுத்த/தயாரிக்க/மேம்படுத்த பல காலமாக முயற்சித்து வருகிறது.அவற்றை சிலமுறை சோதனை செய்து வெற்றியும் பெற்றிருக்கிறது.இந்த வருட இறுதில் முக்கிய மெட்ரோ நகரங்களை காக்க இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூமியின் சுற்றுச்சூழல் மண்டலம் பற்றி படித்திருப்போம் என நம்புகிறேன்.இதை என்டோ அட்மோஸ்பியர் மற்றும் எக்சோ அட்மோஸ்பியர் என பிரிக்கின்றனர்.அதாவது பூமிக்கு மேல் 100கிமீ வரை என்டோ அட்மோஸ்பியர் எனவும் அதற்கு மேல் எக்சோ அட்மோஸ்பியர் எனவும் பிரிக்கின்றனர்.இந்த இரு அடுக்குகளிலும் வரும் ஏவுகணையை வழிமறிக்க இரு வித ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பில் இவைகள் இருக்கும்.

முதல் கட்டமாக புது டெல்லியை சுற்றி இரண்டு அடுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட உள்ளன.இந்த அமைப்பு அணுஆயுத ஏவுகணை அல்லது கன்வென்சனல் ஏவுகணை என இரண்டையும் வழிமறிக்கும்.

அடுத்து இரண்டாம் கட்டமாக மெட்ரோ நகரங்களை பாதுகாக்க இந்த அமைப்புகள் செயல்படுத்தப்பட உள்ளன.அதுமட்டுமல்லாமல் தேசத்தின்  முக்கிய சொத்துக்களையும் பாதுகாக்க இந்த அமைப்பு செயல்படுத்தப்பட உள்ளது.

BMD systems :

கோட்பாட்டளவில் ஒரு எதிரி ஏவுகணையை மூன்று இடங்களில் மறித்து அழிக்கலாம்.ஒன்று அந்த ஏவுகணை ஏவப்பட்ட அடுத்த நொடியில் மறிக்கலாம்.அதன் பின் நடுவழியில் மறிக்கலாம்.இறுதியாக ஏவுகணை இலக்கை நெருங்கும் நேரம்.

இதில் மூன்றிலுமே சாதகம் பாதகம் உள்ளது.அவற்றை பார்க்கலாம்.முதல் தேர்வு ஏவுகணையை ஏவிய நொடியில் அழிப்பது.இது கிட்டத்தட்ட முடியாத காரியம்.இதற்கு உங்களுக்கு ஏவுகணை இருக்கும் இடம் தெரிய வேண்டும்.எதிரி நாட்டில் உங்களுக்கு அதிகபட்ச உளவாளி மற்றும் உளவுத் தகவல் கிடைக்கப்பெற்று ஏவுகணை சேமிப்பு தளம் மற்றும் ஏவு தளம் பற்றி தெரியுமானால் இந்த முதல் தேர்வை செயல்படுத்தலாம்.ஆனால் இது போன்ற தகவல்கள் எதிரிநாட்டின் முக்கிய தளபதிகளுக்கு மட்டுமே தெரியுமாதலால் இதற்கு வாய்ப்பில்லை.

அடுத்து இரண்டாவது தேர்வு ஏவுகணையை இடைப்பகுதியில் மறிப்பது.இது ஒரு வகையில் செயல்படுத்தலாம்.ஏவுகணையின் வேகம் மற்றும் ஏவுபாதையை நமது அமைப்பு தீர்மாணிக்க நேரம் எடுத்துகொள்ளாமல் உடனே செய்யுமானால் இந்த தேர்வு சிறந்ததாக அமையும்.உலகில் பல ஏவுகணை அமைப்புகள் இதை தான் செய்கிறது.சூழ்நிலைமண்டலத்திற்கு வெளியேயே ஏவுகணையை மறிக்கின்றன.மூன்றாவது கடைசி கட்டத்தில் மறிப்பது.இது அதிக பட்ச சிரமம்.

மற்ற கோட்பாடுகளாவன, ஏவுகணையின் வழிகாட்டு அமைப்புகளை ஜாமர்கள் கொண்டு குழப்பி அவற்றின் வழியை மாற்ற செய்வது.ஆனால் தற்கால ஏவுகணைகளில் டெக்காய் அமைப்பும் ,ஸ்டீல்த் பூச்சுகளும் இருப்பதால் இது சாத்தியமற்றது.

இரஷ்யா,இஸ்ரேல்,சீனா,அமெரிக்கா மட்டுமே தற்போது இந்த பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை கொண்டுள்ளன.இவர்களுக்கு அடுத்து இந்தியா தற்போது வெற்றிகரமாக தனது அமைப்பை சோதனை செய்துள்ளது.

India’s BMD program ::

இந்தியாவின் BMD ல் இரண்டு அடுக்கு பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன.ஒன்று பிரித்வி வான் பாதுகாப்பு அமைப்பு (Prithvi Air Defence (PAD)).இது எதிரியின் ஏவுகணையை 80-120கிமீயில் தடுத்து அழிக்கும். (exo-atmospheric interception). அடுத்ததாக advanced air-defence (AAD) இது இலக்கை  15-30 km  (endo-atmospheric interception) தொலைவில் இடைமறித்து அழிக்கும்.

கடந்த டிசம்பர் 2017 ல் இந்தியா Advanced Air Defence (AAD) supersonic interceptor ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

முதல் கட்டமாக இந்த அமைப்பை டிஆர்டிஓ செயல்படுத்தவும்,அடுத்த கட்டமாக எதிரி ஏவுகணையை 5000கிமீ தொலைவிலேயே வழிமறிக்கும் ஏவுகணை அமைப்பு அடுத்த இரு வருடத்திற்குள் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

BMDல் என்னென்ன அமைப்புகள் இருக்கும்:

ஒரு AAD வழிமறிக்கும் ஏவுகணை.ஒரு நிலை , திட எரிபொருள் கொண்ட இந்த ஏவுகணை எதிரியின் ஏவுகணையை 30கிமீக்குள் அழக்கும்.

இந்த ஏவுகணை  high accuracy Inertial Navigation System (INS) அமைப்பு மற்றும்  Redundant Micro Navigation System (RMNS)ஆல் வழிகாட்டப்படும்.இன்பிராரெட் சீக்கர் மற்றும் inertial guidance உதவியால் எதிரி ஏவுகணையை துல்லியமாக தாக்கும்.

அடுத்து ஸ்வார்பிஷ் தொலைதூர தேடும் /கண்காணிப்பு ரேடார்.இவை பாலிஸ்டிக் ஏவுகணையை கண்டுபிடித்து கண்காணிக்க ஏற்றவை.இலக்கை ஒரு முறை கண்டுபிடித்தவுடன் வழிமறிப்பு ஏவுகணைக்கு சமிஞ்சைகள் அனுப்பும்.இந்த சமிஞ்சைகள் பெற்ற உடனே பிரித்வி ஏவுகணை இலக்கை நோக்கி பாய்ந்து துல்லியத் தன்மையுடன் இலக்கை வீழ்த்தும்.இந்த ரேடார் 800கிமீ வரை கண்காணிக்க வல்லது.இதை 15,00கிமீ தூரம் வரை மாற்றியமைக்க வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.