மெட்ராஸ் ரெஜிமென்ட்

மெட்ராஸ் ரெஜிமென்ட்
1758ல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் மிகப் பழமையான ரெஜிமென்ட் ஆகும்.உலகப் போர்களிலும் சரி சுதந்திரத்திற்கு பிறகான இந்தியப் போர்களிலும் சரி தம்பிகளின் (மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்களை மற்ற வீரர்கள் இப்படி தான் அழைப்பர்) பணி அளவிட முடியாதது.
மொத்தம் 21 பட்டாலியன்களை கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்டின் தலைமையகம் ஊட்டியின் வெல்லிங்டனில் அமைந்துள்ளது. ” பணியில் இறப்பதே பெருமை ” ( It is a glory to die doing one’s duty) என்பதை தனது  கொள்கையாகவும், “வீர மதராசி, அடி கொல்லு அடி கொல்லு” என்பதை போர்க்குரலாகவும் கொண்டுள்ளனர்.
1 அசோக சக்ரா, 5 மகா வீர் சக்ரா, 36 வீர் சக்ரா, 304சேனா விருதுகள், 1 நௌ சேனா விருது, 15 பரம் விசிஷ்ட் சேவா விருதுகள், 9 கீர்த்தி சக்ரா, 27 சௌரிய சக்ரா, 1 உட்டம் யுத்த சேவா விருது , 2 யுத்த சேவா விருது, 23 அதிவிசிஷ்ட் சேவா விருது , 47 விசிஷ்ட் சேவா விருது, 151 Mention-in-Despatches, 512 COAS’s Commendation Cards, 271 GOC-in-C’s Commendation Cards, 3 Jeevan Rakshak Padak and 7 COAS Unit Citations, 7 GOC Unit Citation ஆகிய விருதுகளை பெற்றுள்ளது மெட்ராஸ் ரெஜிமென்ட்.
வரலாறு
1639ல் மெட்ராஸ் மகாணம் தொடங்கப்பட்டாலும், ஆகஸ்ட் 1758ல் மெட்ராஸ் ரெஜிமென்ட் தொடங்கப்பட்டது .டிசம்பரில் இரண்டு பட்டாலியன்கள் தொடங்கப்பட்டது.இதை ஒரு கேப்டன் நிர்வகித்தார். மெட்ராஸ் ரெஜிமென்டின் மிகப் பழமையான பட்டாலியன் 9வது பட்டாலியன் தான்.அதன் பிறகு பிரிட்டிஷ் இராணுவத்தில் மற்ற பிரஞ்சு மற்றும் டச்சு படைகளுக்கு எதிராக பல வெற்றிகளை பதிவு செய்துள்ளது.அதன் பிறகு இந்தியாவின் சார்பில் உலகப் போர்களிலும் கலந்து கொண்டது.
இதன் பிறகு பிரிட்டிஷ் இராணுவம் மெட்ராஸ் ரெஜிமென்டில் ஆள்சேர்ப்பை குறைத்துக் கொண்டது.காரணம் இந்தியாவின் தெற்கு பகுதி பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது.எனவே அவர்கள் பஞ்சாபியர்கள் மற்றும் கூர்காக்களை அதிக அளவில் படையில் இணைத்தனர்.அதன் பிறகு இரண்டாம் உலகப் போர் காலத்தில் மீண்டும் ஆள்சேர்ப்பு நடத்திய போது புத்துயிர் பெற்றது.மெட்ராஸ் சாப்பர்கள் சென்ற இடமெல்லாம் தனது வெற்றியை நிலைநாட்டினர்.புகழ் பெற்றனர்.பர்மா முனையில் நடைபெற்ற போர் குறிப்பிடத்தக்கது.முதல் உலகப் போரில் முதலில் களமிறக்கப்பட்டது நமது மெட்ராஸ் ரெஜிமென்ட்.
63 பட்டாலியன் கிழக்கு ஆப்பரிக்காவில் போரிட்டது.75வது பட்டாலியன் ஏடனில் போரிட்டது. 73, 79, 80, 83 மற்றும் 88வது பட்டாலியன்கள் மெசபடோமாயாவை கைப்பற்றுவதில் பெரும்பாங்காற்றின.இரண்டாம் உலகப் போரில் பர்மா மற்றும் இந்தோனேசியாவில் போரிட்டது. முதல் மைசூர் இன்பான்ட்ரி ஜப்பானியர்களுக்கு எதிராக டிசம்பர் 1941 மலாயாவில்  (தற்போது  18 Madras) நடைபெற்ற போரில் தீரமுடன் போரிட்டது.அதே போல் முதல் திருவிதாங்கூர் படை  (தற்போது 9 Madras) ஹாங்காங்கிலும்,இரண்டாவது திருவிதாங்கூர் படை   (தற்போது 16 Madras) ஈரான் மற்றும் ஈராக்கில் போரிட்டது. 4வது பட்டாலியன் பர்மாவில் போரிட்டது.
சுதந்திரத்திற்கு பின்
சுதந்திரத்திற்கு பிறகு , திருவிதாங்கூர் நாயர் பட்டாளம் (9வது பட்டாலியன்) மற்றும் கொச்சின் ,மைசூர் மாநில படைகள் இணைத்து மெட்ராஸ் ரெஜிமென்ட் தொடங்கப்பட்டது.தென்இந்திய இளைஞர்கள் அதிக அறவு படையில் இணைந்தனர்.சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக 1947-48 போரில் களமிறங்கியது நமது ரெஜிமென்ட்.பிறகு 1962,1965,1971 மற்றும் கார்கில் போரிலும் வீரமுடன் போரிட்டு பல விருதுகளை வென்றது.
இலங்கையில் நடந்த ஆபரேசன் பவனிலும் (1987–89 ) கலந்து கொண்டது.காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் நடத்தப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன்களில் சிறப்பாக செயல்பட்டமைக்காக 3 மற்றும் 25 மெட்ராஸ் படை பிரிவிற்கு இராணுவத் தளபதி  unit citations விருது வழங்கினார். மேலும் இன்றும் இரண்டு பட்டாலியன் வீரர்கள் இந்தியாவின் உயர்ந்த போர்களமான சியாச்சின் கிளேசியரை பாதுகாத்து வருகின்றனர்.மேலும் மெட்ராஸ் ரெஜிமென்ட் பல்வேறு மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்டுள்ளது.மேலும்  ஐநா அமைதிப்படையிலும் தங்கள் பங்களிப்பை அளிக்க தவறவில்லை.ஐநாவின் கீழ் காங்கோவில் நடைபெற்ற ஆபரேசன் லுபாராவில் 4வது மெட்ராஸ் கலந்து கொண்டது. 2வது மெட்ராஸ் ஐநா சார்பில் லெபனானில் 1999-2000 வரை அமைதிப் படையில் பணியாற்றியது. அதே போல் 26மெட்ராஸ் காங்கோவில் 2007-08ல் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டது.2001ல் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் ஏழு கோப்பைகளை வென்றது மெட்ராஸ் ரெஜிமென்டின் பெருமையே. சியாச்சினை காப்பதிலும் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
“தம்பிகள் அமைதியாக வேலைபார்ப்பவர்கள் ஆனால் தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளை செம்மையாக செய்து முடிப்பவர்கள்.மனதளவில்,உடலளவில் வலிமையானவர்கள்” Lieutenant General Subroto Mitra (retd),Madras Regiment.
ஹனுமந்தப்பா, இந்தப் பெயரை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 19மெட்ராஸ் படைப் பிரிவைச் சேர்ந்தவர். லெட் மிட்ரா அவர்கள் 19வது மெட்ராசின் கமாண்டராக இருந்த போது அவரும் அதில் இருந்துள்ளார்.தங்களுக்கு கொடுக்கப்படும் ட்ரில்களை வெற்றிகராக முடிப்பவர்கள் மெட்ராஸ் வீரர்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துரதிர்ஷ்ட பனிச் சரிவில் ஹனுமந்தப்பா உள்ளிட்ட 10 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டு பின்னர் வீரமரணம் அடைந்தார்.பத்து நாட்கள் 35அடி ஆழ பனியில் உயிருடன் இருந்த அவரின் மனவலிமையை என்ன சொல்லி போற்றுவது!!!
சியாச்சினை காப்பது மட்டுமல்லாமல் வானூர்தி தளம் அமைப்பது, புதிய சாலைகள் அமைப்பது என முக்கியத்துவம் வாய்ந்த பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதுள்ள 21 பட்டாலியன்களில் முதல் பட்டாலியன் மெகானைஸ்டு இன்பான்ட்ரி ரெஜிமென்டில் மாற்றப்பட்டுள்ளது.
தமிழ் நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் பெருமளவில் மெட்ராஸ் ரெஜிமென்டிலும் இணைகின்றனர்.தமிழ் அல்லது தெலுங்கில் ட்ரில் கமாண்ட் வழங்கப்படும்.1990களுக்கு பிறகு கன்னடர்களும் அதிகளவு படையில் இணைகின்றனர்.ரெஜிமென்டிற்கு ஆபிசர்கள் (officers) எந்த மாநிலத்திலிருந்து வேண்டுமானாலும் இணையலாம்.
Regimental tribute
Let those who come after, see to it that these names be not forgotten,
For they who at the call of duty, left all that was dear to them,
Endured hardships, faced dangers, and finally passed out of sight of men,
In the path of duty and self-sacrifice, Giving their lives that we might live in freedom.
சியாச்சின் ஆபரேசன்கள்
3வது மெட்ராஸ்
1988ல் சியாச்சின் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்ட முதல் பட்டாலியன். மெட்ராஸ் வீரர்களால் அந்த கொடுமையான சூழ்நிலையை தாங்க இயலுமா என்ற சந்தேகத்தில் தான் முதலில் அனுப்பப்பட்டது.ஆனால் நமது வீரர்களின் பனி அளவிடமுடியாததாக இருந்துள்ளது.இந்த காலங்களில் எதிரிகளுடனான மோதலில்  15 எதிரி வீரர்களை கொன்றுள்ளது.மற்றும் 10வீரர்களை இழந்திருந்தது.மற்ற ரெஜிமென்டை விட இது குறைவானதாக இருந்துள்ளது. இரண்டாவது முறை சியாச்சினில் இந்த படை ஈடுபட்ட போது சோனம் நிலைக்கு புதிய வழியை கண்டுபிடித்து பெயர் பெற்றுள்ளது.அந்த நிலை தான் வீரர் ஹனுமந்தப்பா காவல் காத்த நிலை.
2வது மெட்ராஸ்
3வது பட்டாலியனிற்கு பிறகு 1993ல் 2வது பட்டாலியன் அனுப்பப்பட்டது.மீண்டும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சியாச்சினிற்கு அனுப்பப்பட்டதை ஒரு மூத்த இராணுவ அதிகாரி இவ்வாறு விவரிக்கிறார்” தம்பிகள் எந்த சூழ்நிலைகளையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றவர்கள்”
9வது மெட்ராஸ்
2001ல் சியாச்சினுக்கு அனுப்பப்பட்டபிரிவு 9வது பட்டாலியன். 2003ல் இந்திய பாக்கிற்கு இடையே துப்பாக்கிச்சூடு நிறுத்த ஒப்பந்தம் கையழுத்தாவதற்கு முன் இந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடப்பதுண்டு.இருந்தாலும் 9மெட்ராஸ் சிறப்பாக செயல்பட்டது.
 11 மெட்ராஸ்
சியாச்சினுக்கு சென்ற நான்காவது பட்டாலியன் 11 மெட்ராஸ் ஆகும். 2003ல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன் நமது வீரர்கள் அடிக்கடி பாக் வீரர்கள் மீது பெரிய தாக்குதலை நடத்துவதுண்டு என மூத்த இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.இதில் தம்பிகளின் முக்கிய சாதனை என்னவென்றால் சியாச்சின் அடிவார தளத்தில் இருந்து எரிபொருள் பைப் லைனை முன்புற நிலைகளுக்க கட்டி சாதனை படைத்தது தான்.
17 மெட்ராஸ்
17வது மெட்ராஸ் வீரர்கள் தங்களை கத்ராஸ் அல்லது ஆபத்து (danger ) என அழைத்துக் கொள்வார்களாம்.2007ல் சியாச்சின் பாதுகாப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.வீரத்தினா மகுடமாக சுமார் 21,000 அடி உயரத்தில் -50டிகிரி குளிரும் முன்புற எல்லைகளை காத்து வருகின்றன.இங்கு மூச்சுத்திணறல்,மூளை செயல்பாடு குறைதல்,என பல தடைகளையும் தாண்டி வெற்றிகரமாக செயல்பட்டுவருகின்றனர்.
25வது மெட்ராஸ்
2014ல் இந்தியா மற்றும் பாக் இடையே இருந்த  actual ground position line (AGPL) பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. நமது வீரர்களின் உன்னத செயல்பாட்டை ஒரு இராணவ அதிகாரி இவ்வாறு விளக்குகிறார்.“The battalion enhanced the operational and administration sustenance of troops by improving mobility within complexes by bridging crevasses, opening new routes and constructing helipads.”
12 மெட்ராஸ்
 2014ல் சியாச்சினில் தனது பணியை தொடங்கியது.முக்கியமாக பழைய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை பழுது நீக்கி மீண்டும் படையில் இணைக்க பேரூதவி புரிந்தது.அதே போல் 20 வருடத்திற்கு முன் வீரமரணம் அடைந்த இரு வீரர்களின் திருவுடலை திரும்ப கண்டுபிடித்து கீழ் தளம் கொண்டு வந்தனர்.அந்த நிகழ்வை ஒரு மூத்த அதிகாரி இவ்வாறு விவரிக்கிறார்.“It was an immensely gratifying moment that brought much awaited closure for the families.”
19 மெட்ராஸ்
வீரர் அனுமந்தப்பா அவர்களின் பட்டாலியன்.பணிக்காலத்தில் 10 வீரர்கள் வீரமரணம் அடைந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.தங்கள் 90நாட்களை இந்தப் பிரிவு நிறைவு செய்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.