Breaking News

மஹர் ரெஜிமென்ட்

மஹர் ரெஜிமென்ட்

இந்திய இராணுவத்தின் ஒரு இன்பான்ட்ரி ரெஜிமென்ட் தான் மஹர் ரெஜிமென்ட்.மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள மஹர் என்ற இனத்தை அடிப்படையாக வைத்து இந்த ரெஜிமென்ட் உருவாக்கப்பட்டிருந்தாலும் தற்போது இந்தியாவின் அனைத்து இனம்,மதம் மற்றும் அனைத்து பிரிவினரும் இணையும் ஒரே ரெஜிமென்டாக மஹர் ரெஜிமென்ட் விளங்குகிறது.

1941 ல் தொடங்கப்பட்ட இந்தப் படை 19 பட்டாலியன்களுடன் லைன் இன்பாட்ரியாக உள்ளது.முயற்சி மற்றும் வெற்றி என்பதை கொள்கையாகவும் இந்தியாவுக்கே வெற்றி என்பதை போர்க்குரலாகவும் கொண்ட இந்தப் படை ஒரு பரம் வீர் சக்ரா,4 மகா வீர் சக்ரா, 29 வீர் சக்ரா, 1 கீர்த்தி சக்ரா, 12 சௌரிய சக்ரா, 22 விஷிஸ்ட் சேவா விருது மற்றும் and 63 சேனா விருதுகளை பெற்றுள்ளது.

ஒரு ஜோடி விக்கர் நடுத்தர இயந்தித் துப்பாக்கியை குறுக்காக வைத்து அதன் நடுவில் ஒரு கத்தியை வைத்தது தான் இந்த ரெஜிமென்டின் முத்திரை ஆகும்.இதற்கு முன்னர் அந்த கத்திக்கு  பதிலாக கொரிகான் பில்லர் இடம் பெற்றிருந்தது.பின்னர் அது மாற்றப்பட்டது.

வரலாறு

மஹர்கள் தங்களுக்கென்றே நீண்ட நெடிய இராணுவச் சரித்திரத்தைக் கொண்டுள்ளனர்.
அவர்களின் வீரம் காரணமாக மராத்திய அரசர் சிவாஜி அவர்கள் தனது படைப் பிரிவிற்கு மஹர்களை அதிக அளவு சேர்த்துள்ளார்.அதன் பிறகு பிரிட்டிசாரின் கண்களின் அவர்களின் வீரம் தென்பட பிரிட்டிஷாரின் பாம்பே இராணுவத்தில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கு மஹர்களே நிறைந்திருந்தனர்.கொரேகான் போர் அவர்களின் போர்த்திறமைக்கு சான்றாகவே விளங்குகிறது.இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் எனக் கருதப்படும் 1857 புரட்சியில்  இந்த பாம்பே இராணுவத்தில் இருந்த 21வது 27வது படை மஹர்களும் பிரிட்டிஷாருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் முழங்கிய இந்தியாவுக்கே வெற்றி என்ற அந்த போர்க்குரல் தான் இன்றுவரை தொடர்கிறது.இதை துரோகமாக கருதி பிரிட்டிஷார் அடுத்த பல வருடத்திற்கு மஹர்களை படையில் இணைக்கவில்லை.அந்த பிரிவு மொத்தமாகவே கலைக்கப்பட்டது.

அதன் பிறகு 1914ல் முதலாம் உலகப் போரின் போது பிரிட்டிஷார் ஜெர்மன் கூட்டு படைகளுக்கு எதிராக தோல்வியடைந்து கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் மீண்டும் அதிக அளவு ஆள்சேர்த்த போது மஹர்களும் இணைத்து கொள்ளப்பட்டனர்.111வது மஹர் பிரிவு 1917ல் தொடங்கப்பட்டது.ஆனால் போரில் அதிக அளவு அவர்கள் ஈடுபடுத்தப்படாததால் அதன் பின்பு 71வது பஞ்சாப் பிரிவுடன் இணைக்கப்பட்டது.அதன் பிறகு மார்ச் 1921ல் அந்த பிரிவு மீண்டும் கலைக்கப்பட்டு மஹர்களை இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.அதன் பிறகு இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.பிரிட்டிஷ் கூட்டுப் படைகளை நாசி கூட்டுப் படைகள் பந்தாடிய நேரம்.பிரிட்டிஷார் மீண்டும் இந்தியாவில் அதிக அளவு ஆள்தேர்வு செய்தனர்.

1941 ஜீலையில் பி.ஆர் அம்பேத்கார் அவர்கள் அப்போதைய இந்தியாவின் வைசிராய் எக்சிகியூடிவ் கௌன்சிலின் பாதுகாப்பு கமிட்டியில் நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு தனது தொடர்ந்த சீரிய முயற்சியால் மஹர்களுக்கென தனி ரெஜிமென்ட் தொடங்கப்பட்டது.மேலும் மஹர்களை அதிக அளவு இராணுவத்தில் இணைய வேண்டினார்.அதன் பிறகு அக்டோபர் 13வது முன்னனி படையின் லெட் கலோ ஜாக்சன் மற்றும் சுபே மேஜர் சேக் ஹஸ்னுதீன் அவர்களின் கீழ் மஹர் ரெஜிமென்டின் முதல் பட்டாலியன் பெல்கமில் தொடங்கப்பட்டது.ஜீன் 1942ல் லெட் கலோ கிர்வான் மற்றும் சுபே மேஜர் போலாஜி அவர்களின் கீழ் கம்ப்டியில் இரண்டாவது ரெஜிமென்ட் தொடங்கப்பட்டது.மூன்றாவது பட்டாலியனாக 25வது மஹர் பெல்கமில் லெட் கலோ சாம்பியர் மற்றும் சுபே மேஜர் போன்சாலே அவர்களின் கீழ் 1942 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது.மூன்றாவது பட்டாலியன் நௌசேராவில் தொடங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் முதல் மற்றும் மூன்றாவது பட்டாலியன் வட மேற்கு முன்னனி பகுதியிலும் மற்ற 2 மற்றும் 25வது பட்டாலியன் உள்நாட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டது.அதன் பிறகு பர்மியப் போரிலும், ஈராக்கிலும் போரிட்டனர்.அதன் பிறகு 1946ல் 25வது மஹர் பிரிவு கலைக்கப்பட்டது.அதிலுள்ள வீரர்கள் மற்ற மூன்று பட்டாலியன்களில் இணைந்தனர்.
1946 அக்டோபரில் மஹர் ரெஜிமென்ட் மீடியம் இயந்திரத் துப்பாக்கி ரெஜிமென்டாக மாற்றப்பட்டு அதன் தலைமையகம் கம்டேயில் ஏற்படுத்தப்பட்டது.அதன் பின்பு தான் மஹர் முத்திரையில் விக்கர்ஸ் இயந்திர துப்பாக்கி சின்னம் சேர்க்கப்பட்டது.அதே போல் பிரிவினைக்கு பிறகு அகதிகளின் பாதுகாப்பிற்கு மஹர் படை ஈடுபடுத்தப்பட்டது.

பிரிவினையின் போது எல்லையில் இருந்த கிராமத்தினர் தங்களுக்கென ஒரு  எல்லைப் படையை உருவாக்கினர்.அவர்கள் பாகிஸ்தானியர்கள் எல்லைக் கிராமங்களை தாக்காதவாறு சிறப்பாக காவல் செய்தனர்.அவர்கள் பஞ்சாப்,ஹரியானா,ஹிமாச்சலை சேர்ந்தவர்கள்.அவர்கள் சிறப்பாக செயல்பட்டமைக்காக அவர்களை கிழக்கு பஞ்சாப் முன்னனி படையாக 1948 அங்கிகரிக்கப்பட்டது.பஞ்சாப் காவல் படையுடன் இணைந்து அவர்கள் சிறப்பாக எல்லைக் காவல் செய்தனர்.பின்பு 1951ல் அவை 1,2 மற்றும் 3வது எல்லை ஸ்கௌட் படையாக மாற்றப்பட்டு அதன் பிறகு அவை 4,5 மற்றும் 6 வது மஹர் பட்டாலியன்களாக இணைக்கப்பட்டது.இந்த மூன்று பட்டாலியன்களிலும் பல இன ,மத வீரர்கள் இருந்தனர்.

1st, 2nd, 3rd, 7th, 8th and 13 பட்டாலியன்கள் மஹர் வீரர்கள் மட்டுமே இணைக்கப்பட மற்ற பட்டாலியன்களில்  குஜராத்,ஒரியா,வங்காளிகள் பெருமளவு இணைக்கப்படுகின்றனர்.1965ல் இந்தியா பாக் போரில் மஹர் ரெஜிமென்ட் சிறப்பாக செயல்பட்டது.

108 மற்றும் 115வது இன்பாட்ரி பட்டாலியன்கள் டெரிடோரியல் இராணுவமாக இணைய 1,30,51 ஆகியவை இராஷ்டீரிய ரைபிள்சில் இணைக்கப்பட்டுள்ளது.தற்போது மஹர் ரெஜிமென்டின் தலைமையகம் மத்திய பிரதேசத்தில் உள்ளது.

மேஜர் இராமசாமி பரமேஸ்வரன்

8வது மஹர் படையில் இணைந்து  இலங்கை அமைதிப் படையில் பணியாற்றியவர்.இலங்கையில் சிறப்பாக செயல்பட்டு வீரமரணம் அடைந்தவர்.போரில் காட்டிய வீரம் காரணமாக பரம் வீர் சக்ரா பெற்றார்.

வீரவணக்கம்

Leave a Reply

Your email address will not be published.