இராஜ்புத் ரெஜிமென்ட்

இராஜ்புத் ரெஜிமென்ட்
ராஜ்புத் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் லைன் இன்பான்ட்ரிகளில் ஒன்றாகும்.இராஜ்புத்,குர்ஜார் இனத்தை சேர்ந்தவர்கள் இந்த ரெஜிமென்டில் இணைவார்கள்.
1778 தொடங்கப்பட்ட இந்த ரெஜிமென்டில் தற்போது 20 பட்டாலியன்கள் உள்ளன.எங்கும் வெற்றியே என்ற கொள்கையோடு ஹனுமன் கடவுளுக்கே வெற்றி (  Bol Bajrang Bali Ki Jai) என்பதை  போர்க்குரலாக கொண்டுள்ளனர்.
1 பரம் வீர்சக்ரா, 1 அசோக சக்ரா, 5 பரம் விசிஷ்ட் சேவா விருது , 7 மகாவீர் சக்ரா, 12 கீர்த்தி சக்ரா, 5 அதி விஷிஷ்ட் சேவா விருது, 58 வீர் சக்ரா, 20 சௌரிய சக்ரா,4 யுத்த சேவை மெடல், 67 சேனா விருது, 19 விசிஷ்ட் சேவா விருது, 1 Bar to Vishisht Seva Medal, 1 பத்மஸ்ரீ விருதுகளை இந்த ரெஜிமென்ட் பெற்றுள்ளது.
வரலாறு
பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் இராஜபுத்திரர்களின் வரலாறு 1778ல் தொடங்குகிறது.1778ல் மூன்றாவது பட்டாலியன் பெங்கால் நேடிவ் இராணவத்தின் 31வது பட்டாலியனாக தொடங்கப்பட்டது.முதல் இரண்டு பட்டாலியன்கள் 1798ல் தொடங்கப்பட்டது.இந்த மூன்றாவது பட்டாலியன் தான் அரசர் ஹைதர் அலியை வீழ்த்தி கடலூரை கைப்பற்றியது.இதில் அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் தான் ரெஜிமென்ட் முத்திரையில் கடார் எனப்படும் கத்தி குறுக்காக இணைக்கப்பட்டது.கூர்காக்களுக்கு எதிரான போரில் பிரிட்டிஷ் ராஜ்புத் படையின் 1 மற்றும் 4வது பட்டாலியன்களை ஈடுபடுத்தினர்.அதன் பிறகு 1st, 2nd, 3rd, 4th மற்றும்  5வது பட்டாலியன்கள் ஆங்லோ-சீக் யுத்தத்தில் சீக்கியர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டனர்.குஜராத் போரில் 5வது இராஜ்புத் படை சீக்கியர்களின் முக்கிய நிலைகளை கைப்பற்றியது.
1857ல் முதல் இந்திய சுதந்திர புரட்சியில் கலந்து கொண்டதற்காக 2வது ,3வது மற்றும் 4வது ராஜ்புத் பட்டாலியன்களின் ஆயுதங்கள் பிரிட்டிஷ் அரசு பறித்து கொண்டது.இதன் பிறகு பல்வேறேு நிகழ்வுகளில் இராஜ்புத்திரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்த காலங்களில் ஒரு விக்டோரிய கிராஸ் விருதும் பெற்றது இந்தப் படை.1876ல் முதல் பட்டாலியன் இங்கிலாந்து  இராணியால் கௌரவிக்கப்பட்டு ராயல் ரெஜிமென்ட் எனப் பெயர் பெற்றது.
முதல் உலகப் போர்
முதல் உலகப் போரில் ராஜ்புத் படை ஈடுபடுத்தப்பட்டது.முதல் பட்டாலியன் மெசபடோமியாவில் ஜெர்மன் படைகளுக்கு எதிராக போரிட்டது.துருக்கிக்கு எதிராக 3வது பட்டாலியன் கூர்னா போர் மற்றும் குட்-அல்-அமாரா பகுதிகளில் போரிட்டது.ராஜ்புத் வீரர்கள் போரில் வீரத்துடன் போரிட்டதால் போருக்கு பிறகு மொத்தம் 37 விருதுகள் பெற்றனர்.இது மற்ற ரெஜிமென்ட்கள் பெற்ற விருதுகளை விட அதிகம்.ஒரு முறை துருக்கிய படைகள் 3வது ராஜ்புத் படையை இரண்டாக பிளந்து ஊடுருவி கடும் தாக்குதல் நடத்தினர்.அப்போது வீரர் சிதல் பக்ஸ் என்பவர் படுகாயமுற்று விழுந்தார்.படைகள் பின்வாங்க ஒரு சக வீரர் செபே சந்து சிங் துணிந்து சென்று அவரை மீட்டு வந்தார்.அவரகள் மார்சல் தீவுகள் வழியாக சென்றாலும் அவர்கள் இருவரும் துருக்கி வீரர்களுக்கு இலக்காக மாற துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.இருவருக்குமே IOM மற்றும்  Médaille militaire ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
1922ல் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் ரெஜிமென்டுகள் சீரமைக்கப்பட்டன.அப்போது அனைத்து ராஜ்புத் பட்டாலியன்களும் இணைக்கப்பட்டு 7வது இராஜ்புத் ரெஜிமென்ட் எனப் பெயரிடப்பட்டது.இரண்டு புது கம்பென்களிகள் பஞ்சாபி மற்றும் இந்திய முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.1936 மற்றும் 37களில் 3வது பட்டாலியன் தற்போதைய பாக்கின் வசிரிஸ்தான் பகுதியில் பணியமர்த்தப்பட்டு அங்கு ஆப்கன் போரளிகளை கட்டுப்படுத்த அனுப்பப்பட்டது.
இரண்டாம் உலகப் போர்
முதல் பட்டாலியன் பர்மாவின் அரக்கான் பகுதியில் போரிட்டது.அந்தமான் பகுதியின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டது.
இரண்டாவது பட்டாலியனும் அரக்கான் பகுதியில் தான் போரிட்டது.ஜப்பான் படைகளுக்கு பாதுகாப்பாய் இருந்த ஒரு முக்கிய மலைப் பகுதியை கைப்ப்றினர்.அது ராஜ்புத் மலை என பின்னர் அழைக்கப்பட்டது.இதில் ஒரு வீரர் IOM விருது , ஐந்து வீரர்கள் MC விருது மற்றும் இரு வீரர்கள் MM விருது பெற்றனர்.
3வது பட்டாலியன் 1940 ஆகஸ்டு செப்டம்பரில் எகிப்திற்கு அனுப்பப்பட்டது.இந்த படையணியை இத்தாலிய குண்டுவீச்சு விமானங்கள் அடிக்கடி தாக்கினர்.விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் கொண்டு சில இத்தாலிய விமானங்களை கூட வீழ்த்தினர்.எகிப்தில் போரிட்டனர்.எல் அலமைன் போரில் பங்கேற்றனர்.இந்தியா திரும்பி பின் கொகிமாவில் பணியாற்றினர்.5வது பட்டாலியன் ஹாங்காங்கில் போரிட்டது.130 பேர் இதில் உயிரிழந்தனர்.இதன் கேப்டன் அன்சாரியை ஜப்பானியர்கள் தங்களுக்கு உதவ வேண்டினர்.மறுத்த அவரை அடித்து துன்புறுத்தி கொன்றனர்.அவரின் வீரம் காரணமாக அவருக்கு ஜார்ஜ் கிராஸ் வழங்கப்பட்டது.
1947-48 காஷ்மீர்
சுதந்திரம் பெற்று பிரிவினை நடைபெற்ற தருணம்.இந்தியா பாக் முதல் போரில் 1st, 2nd, 3rd மற்றும் 4வது இராஜ்புத் பட்டாலியன்கள் பங்கேற்றன.3வது இராஜ்புத் தான் முதலில் களமிறக்கப்பட்டது.பின் முதல் பட்டாலியன் இணைந்து 50வது பாரா பிரைகேடுடன் கூடி மலைப் பகுதியில் ஊடுவியிருந்த ஆக்கிரமிப்பாளர்களை விரட்ட தொடங்கியது.நௌசேரா பகுதியில் இவைகள் நடவடிக்கைகள் எடுக்க அக்னூர் பகுதியில் 4வது பட்டாலியன் அனுப்பப்பட்டு 2வது பட்டாலியன் தொலைத் தொடர்பு வசதிகளை பாதுகாக்க களமிறக்கப்பட்டது.
1 மற்றும் 3வது பட்டாலியன்
நெளசேரா பகுதிகளில் ஆக்ரோசமாக ரோந்து பகுதியில் ஈடுபட்டது.1948 பிப்ரவரி 6ல் நௌசேரா பகுதியில் மேலதிக ஆக்ரோச ரோந்து பணியை மேற்கொண்டிருந்த போது அந்த ரோந்து படையை எதிரிகள் 1000பேர் சூழ்ந்து தாக்க தொடங்கினர்.ஏழு மணி நேரம் சண்டை தொடர்ந்தது.சுபேதார் கோபால் சிங் அவர்களின் பிளாட்டூன் கடும் நெருக்குதலுக்கு உள்ளானது.அவருக்கு மூன்று முறை குண்டடி பட்டது.எதிரிகள் அவரது பிளாட்டூனை ஊடுருவி தாக்க தாக்க திரும்ப திரும்ப ஊடுருவலை சமாளித்து பிளாட்டூனை ஒன்று சேர்த்து போரிட்டார்.மீண்டும் ஒருமுறை பிளாட்டூனை எதிரிகள் ஊடுருவி இரண்டாக பிரிக்க சுபே கோபால்சிங் மற்றும் மூன்று வீரராகள் மற்றும் தனியாக பிரிந்தனர்.அவர்களுள் ஒருவர் செபெ சிக்டார் சிங்.நிலைமை தீவிரமடைய கோபால் சிங் எதிரிகள் மீது துப்பாக்கி முனை கத்தி கொண்டு தாக்க அவர் பலத்த காயமுற்று கீழே விழ சுதாரித்த சிக்டார் சிங் அவரை காப்பாற்றி முக்கிய ரோந்து பணி நடக்கும் இடத்திற்கு கொண்டு வந்தார்.அதே போல் ஹவில்தார் மகாடியோ சிங் பிரேன் இயந்திர துப்பாக்கிகளுக்கு தோட்டாக்கள் வழங்கி கொண்டிருந்தார்.தோட்டாக்கள் முடிவடைய அவர் எதிரியின் கடும் துப்பாக்கி சூடுகளுக்கும் இடையே ஓடி ஓடி தோட்டாக்கள் கொண்டு வந்து கொடுத்தார்.அவ்வாறு கொண்டு வரும் போது ஒரு முறை எதிரி தோட்டா அவர்மீது பாய கீழே விழுந்து தவழ முயன்ற போது எதிரியின் தோட்டாக்கள் அவரை துளைத்து செல்ல வீரமரணம் அடைந்தார்.இந்த மொத்த நடவடிக்கைகளிலும் 3வது பட்டாலியன் 3 வீர் சக்ரா பெற்றது.சுபே கோபால் சிங் மற்றும் செபெ சிக்டார் சிங் உயிருடனும் ஹவில்தார் மகாடியோ சிங் வீரமரணத்திற்கு பின்னரும் பெற்றனர்.
ஜாங்கர் எதிரிகளால் கைப்பற்றப்பட்டு நௌசேராவை நோக்கி எதிரிகள் வந்து கொண்டிருந்தனர்.50வது பாரா பிரைகேடின் கமாண்டர் பிரிகேடியர் முகம்மது உஸ்மான் நிலையை கவனமாக கண்காணித்துக் கொண்டிருந்தார்.அப்போது இராஜபுத்கள் தான் நௌசேராவின் முக்கிய பகுதிகளை காத்து வந்தனர்.சி கம்பெனியின் முதல் இராஜ்புத் நௌசேராவின் முக்கியபகுதியான டைந்தார் பகுதியை காப்பாற்றி வந்தனர்.எந்த விலை கொடுத்தேனும் அந்த இடத்தை பாதுகாக்குமாறு சி கம்பெனிக்கு பிரிகேடியர் உஸ்மான் உத்தரவிட்டிருந்தார்.6 பிப் 1948 அதிகாலை வேளையில் பாகிஸ்தானிய பதானியர்கள் மற்றும் பாக் இராணுவத்தினர் டைந்தார் பகுதியை தாக்கினர்.எதிரிகள் 1500பேர் கொண்ட வலுவான படை.200-300 பேர் அலை அலையாய் தாக்க தொடங்கினர்.ஆறு முறை தொடர்ந்து தாக்கினர்.சில நிலைகளில் வீரர்கள் கைகளால் அவர்களுடன் போரிட்டனர்.3இன்ச் மோர்ட்டார் டிடாச்மென்டில் இருந்த ஹவில்தார் தயா ராம் எதிரிகள் முக்கிய பாதுகாப்பு நிலையை நெருங்கி விட்டதை அறிந்தார்.மோர்ட்டார் பிரிவினை கொண்டு அதன் மொத்த தொலைவின் வேத்தில் குண்டுகளை செலுத்த உத்தரவிட்டார்.இந்த குண்டுகள் முக்கிய பாதுகாப்பு வளையத்தில் 30-50 யார்டில் விழ பயத்தில் எதிரிகள் தயா ராம் இருந்த இடத்தை அதிக பேராக தாக்க தொடங்கினர்.தயா ராம் காயமடைந்தார்.அவரது பிரைன் இயந்திர துப்பாக்கியை இயக்கிய வீரர் வீரமரணம் அடைந்திருந்தார்.அவர் அந்த பிரைன் இயந்திர துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார்.அவரது வீரதீரம் காரணமாக அவருக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
சி கம்பெனியின் இடது பக்க அணி தீரத்துடன் போரிட்டது.இந்த பகுதி நாய்க் ஜீடு நாத் சிங் அவர்களால் பாதுகாக்கப்பட்டது.இந்த பகுதி கடினமாக பாதுகாக்கப்படுவதை அறிந்த எதிரிகள் அதிகமான சிரத்தையுடன் நாய்க் ஜிடு நாத் அவர்களின் நிலையை தாக்கினர்.
தனது பிரென் இயந்திர துப்பாக்கி,தனது கைத்துப்பாக்கி, கிரேனுடு என மாறி மாறி தாக்கினார்.எதிரிகள் முன்னேறினர்.அவர் விடவில்லை.பின்வாங்கவும் இல்லை.தனது பாதுகாப்பு நிலையில்  இருந்து திடீரென வெளியேறி தனது பிரென் துப்பாக்கி கொண்டு தாக்க எதிரிகள் பின்வாங்கி ஒன்று சேர்ந்தனர்.எதிரிகள் மீண்டும் தாக்கினர்.மீண்டும் நின்ற இடத்தில் நின்று வீரமுடன் அவர்களை எதிர்கொண்டார்.இந்த முறை அவர் காயமடைந்தார்.ஆனால் வீழ்ந்துவிடவில்லை.அதே நேரத்தில் இடது பக்க அணி பலத்த சேதமடைந்தது.மூன்றாவது முறை எதிரிகள் தாக்கினர்.தனது பிரென் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டே எதிரிகள் மீது கிரேனேடுகளை வீசினார்.இந்த நேரத்தில் இரண்டு தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்தது.ஒரு நெஞ்சில் மற்றொன்று தலையில்.கீழே விழுந்தார்.நாய்க் ஜீடு நாத் சிங் அவர்களின் வீரதீரம் காரணமாக அவருக்கு வீரமரணத்திற்கு பிறகு பரம்வீர் சக்ரா வழங்கப்பட்டது.
50களில் இராஜ்புத் ரெஜிமென்ட் மாற்றியமைக்கப்பட்டது.பிரைகேடு ஆப் கார்ட்ஸ் என்ற படைப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டு முதல் இராஜ்புத் அங்கு மாற்றப்பட்டு 4வது கார்ட்ஸ் ஆக மாற்றப்பட்டது.இந்த நேரத்தில் தான் இந்தப் படையில் இஸ்லாமியர்களும் வங்காளிகளும் இணையத் தொடங்கினர்.பைகானேர் சாதுல் லைட் இன்பான்ட்ரி மற்றும் ஜோத்பூர் சர்தார் இன்பான்ட்ரி 19மற்றும் 20வது இராஜ்புத் பட்டாலியனாக மாற்றப்பட்டது.பைகனேர் சாதுல் இன்பான்ட்ரி 1464ல் தொடங்கப்பட்டது.ராணா சங்கா அவர்களின் கீழ் பாபருக்கு எதிராக நடைபெற்ற கன்வா போரில் இந்த படை பங்கேற்றுள்ளது.முதல் உலகப் போரில் கங்கா ரிசாலா என்ற ஒட்டகப்படையை உருவாக்கி போரிட்டனர்.இந்த நேரத்தில் இந்தப் படை  1 DSO, 1 IOM, 11 IDSMs, 9 MMs மற்றும் 16 Mentione -in-Despatches ஆகிய விருதுகளை அள்ளிகுவித்திருந்தது.அதன் பிறகு ஜோத்பூர் சர்தார் இன்பான்ட்ரி 1922ல் தொடங்கப்பட்டது.இரண்டாம் உலகப் போரில் எரிட்ரியாவில் அமெரிக்காவின் 5வது இராணுவத்தின் பகுதியாக போரிட்டது.ஏட்ரியாட்டிக் கடல் பகுதியில் 10வது  இந்திய டிவிசன்களுடன் போரிட்டது.இந்தக் காலங்களில் இந்தப் படை   1 DSO, 1 MC, 3 MMs and 17 Mentioned-in-Despatche விருதுகளை பெற்றது. 17 வது இராஜ்புத் நாகலாந்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.இந்தக் காலங்களில் இது ஏழு கீர்த்தி சக்ரா மற்றும் 2 சௌரியா சக்ரா விருதுகளை பெற்றது.
இந்திய சீனப் போர்
1962 போரில் இரண்டு பட்டாலியன்கள் ஈடுபடுத்தபட்டன.அவை நெபா என்று அழைக்கப்பட்ட North-East Frontier Agency(NEFA) யில் கடுமையாக போரிட்டன.7வது இன்பான்ட்ரி பிரைகேடு சார்பில் போரிட 2வது பட்டாலியன் லெட் கலோ ரிக் தலைமையில் வாலோங் பகுதியில் இருந்து நம்கா சு ஆற்றுக்கரை பகுதிக்கு 10 அக்டோபரில் அனுப்பப்பட்டது.இராணுவத்தின் எந்தவித சப்போர்ட் இல்லாமல் குறைந்த பட்ச பனி பாதுகாப்பு உடைகள் கூட இல்லாமல் இந்த படை ஆற்றுக்கரை பகுதியில் இருந்தது.சீனா இராணுவம் வெள்ளம் போல் வந்தது.அந்த பகுதியில் உள்ள அனைத்து உயர்ந்த பகுதிகளையும் கைப்பற்றி இந்தப் படைப் பிரிவை தனிமைப்படுத்தியது.இருபக்கமும் எதிரியால் படை சூழப்பட்டது.ஆனால் சரணடையாமல் இறுதி வரை போரிட்டது நமது படை.வீரம் அனைத்து இடங்களிலுமே வெளிப்பட்டது.ஓரிடத்தில் ஒரு தற்காலிக பாலத்தை காக்க நாய்க்  ரோசன் சிங்கின் பிரிவு கடைசி வீரர் இருக்கும் வரை போரிட்டனர்.மற்றுமொரு இடத்தில் சுபேதார் தஸ்ரத் சிங் அவர்களின் பிளாட்டூனை மூன்று முறை சீன வீரர்கள் அலை அலையாய் தாக்கி ஒன்றும் பன்ன முடியவில்லை.கடைசியாக ஏழு வீரர்கள் எஞ்சியருந்த நிலையில் நான்காவதாக தாக்க முனைந்த போது நமது வீரர்களிடம் தோட்டக்கள் முடிவடைந்திருந்தது.கத்திகளை துப்பாக்கி முனையில் மாட்டி சீனர்களை கொன்றனர்.இதில் நமது நான்கு வீரர்கள் வீரமரணம் அடைய மூன்று வீரர்களை சீனர்கள் கைதிகளாக கைப்பற்றினர்.இதே போல் ஜெமடார் போஸ் அவர்களின் பிளாட்டூனை சீனர்கள் மூன்று முறை தாக்க நான்காவதாக 10 வீரர்கள் எஞ்சிய நிலைகள் தோட்டாக்கள் முடிவடைய கத்தியை கொண்டு தாக்கினர்.அவர் முதல்கொண்டு பிளாட்டூனில் பெரும்பான்மையான  வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.பாரத் ரக்சக் இணையத்தில் இதை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.
பி,சி மற்றும் டி கம்பெனியில் ஒரு வீரருக்கு கூட வீர விருதுகள் வழங்கப்படவில்லை.ஏனெனில் அனைவரும் வீரமாக போரிட்டு வீரமரணம் அடைந்ததால் வெளியில் தெரியவில்லை.ஆனால் லெட் கலோ ரிக் சீனாவால் பிடித்து வைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.இவர் வீரதீர விருதுகள் வழங்க இந்திய அரசுக்கு எழுதியும் அரசும்,பாதுகாப்பு அமைச்சகமும் இவரை கண்டுகொள்ளவில்லை.நம்கா சு ஆற்றில் போரிட்டவர்களுக்கு அங்கு ஒரு டின் சீட்டில் சிறிய நினைவகம் உள்ளது வருத்தமே.
மேஜர் பிகே பான்ட் அவர்களின் கம்பெனியில் 112 வீரர்களில் 82பேர் கொல்லப்பட்டனர்.2 ராஜ்புத் பட்டாலியனின் 513 அனைத்து ரேங்க் வீரர்களில் 282 பேர் வீரமரணம் அடைந்தனர்.81 பேர் காயம் மற்றும் போர்க்கைதியாக பிடித்து செல்லப்பட்டனர்.
4வது இராஜ்புத் லெட் கலோ அவஸ்த் தலைமையில் செலா பொம்டிலா பகுதியில் கடும் எதிர்ப்பை சந்தித்தது.அதன் பிரைகேடு கமாண்டர் செலா என்ற இடத்தை நின்று காக்க வேண்டும் என கூற டிவிசனல் கமாண்டர் வீரர்களை பின்வாங்க ஆணையிட அதிகாரிகளுக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது.டிவிசனல் கமாண்டர் மற்றும் கார்ப் கமாண்டர் பின்வாங்க ஆணையிட வீரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட பல்வேறு இடங்களில் சீனர்கள் முக்கிய இடங்களை கைப்பற்றி பின்வாங்கிய வீரர்கள் மீது தாக்கினர்.அந்த மொத்த பட்டாலியனும் பல குழுவாக சிதற ஒரு குழுவிற்கு தலைமை தாங்கி நின்ற அவஸ்த் அவர்களை சீனர்கள் தாக்க தனது 300 வீரர்களுடன் வீரமரணம் அடைந்தார்.சிறு குழப்பம் பல உயிர்களை வாங்கிவிட்டது.
1965 போர்
இந்த போரில் பாக் ரான் ஆப் கட்ச் பகுதியை தாக்கிய அதே நேரம் கார்கிலையும் தாக்கியது.1965 மேயில் அங்கிருந்த இந்திய நிலையை தாக்கியது.இவர்கள் ஸ்ரீநகர் லே சாலையை எதுவும் செய்வதற்கு முன்னர் அதை தடுக்க 121 இன்பான்ட்ரி பிரைகேடின் ஒரு பகுதியாக 4வது இராஜ்புத் பாகிஸ்தானின் பாயின்ட் 13620 மற்றும் கருப்பு பாறை ( Black Rock (15000)) ஆகிய மலைகளை கைப்பற்ற உத்தரவிடப்பட்டது.இந்த இரண்டு  மலைப்பகுதிகளில் உள்ள நிலைகள் மூன்றாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நிலையையும் பாக்கிஸ்தானின் ஒரு பிளாட்டூனுக்கும் அதிகமான வீரர்கள் மூன்று மோர்ட்டார்கள் மற்றும் நடுத்தர இயந்திர துப்பாக்கி கொண்டு பாதுகாத்தனர்.பி கம்பெனியின் மேஜர் பல்ஜித் சிங் ரன்தவா அவர்கள் தனது படையுடன் எதிரியின் இடத்தில் ஊடுருவி அவர்களின் நிலைக்கு பின்னாள் சென்று தாக்கினார்.இந்த தாக்குதலில் இராஜ்புத்கள் வெற்றிகரமாக எதிரி நிலைகளை கைப்பற்றினர்.மேஜர் ரன்தவா அவர்களுக்கு மகாவீ்ர் சக்ரா( வீரமரணத்திற்கு பிறகு) வழங்கப்பட்டது.கேப்டன் ரன்பீர், செபெ புத் சிங் அவர்களுக்கு  தலா ஒரு வீர் சக்ரா மற்றும் ஹவில்தார் கிர்தாரி அவர்களுக்கு ஒரு வீர் சக்ரா வீரமரணத்திற்கு பிறகு வழங்கப்பட்டது.இரண்டு கட்ட தாக்குதலுக்கு பிறகு கருப்பு பாறை ஏ கம்பெனியால் கைப்பற்றப்பட்டது.சில வாரங்களுக்கு பிறகு நல்லென்ன அடிப்படையில் இந்த நிலைகள் பாகிஸ்தானுக்கே திருப்பி வழங்கப்பட்டது.ஆனால் பிறகு மறுபடிம் நிலை மோசமடைய மீண்டும் வேறு பட்டாலியனால் இந்த நிலைகள் ஆகஸ்டில் கைப்பற்றப்பட்டன.
ஆகஸ்டில் 4வது இராஜ்புத் படை ஹாஜிபார் மற்றும் பிசாலி பகுதிக்கு அனுப்பப்பட்டது.4/5செப்டம்பர் இரவில் அந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டன.பாகிஸ்தானிகள் நடுத்தர இயந்திர துப்பாக்கி கொண்டு ஐந்து முறை அலையாய் தாக்கியும் ஒன்றும் செய்ய முடியவில்லை.அந்த நேரத்தில் நமது படைகளின் வெடிபொருள்கள் முடிவடைந்திருந்தது.துணைக்கு மேலதிக படைகள் வராத காரணத்தால் பின்னேறி பாதுகாப்பான நிலைக்கு திரும்பியது.6வது இராஜ்புத் படை ஸ்ரீநகர் சுற்றுபகுதியில் ஊடுருவியவர்களை வெற்றிகரமாக விரட்ட அக்னூர் பகுதிக்கு அனுப்பப்பட்டது.அங்கு இந்திய இராணுவத்தின் 15வது கார்ப்சின் 191வது இன்பான்ட்ரி பிரைகேடில் இந்தப் பவை  இணைக்கப்பட்டது.இந்த நேரத்தில் வீரர்களுக்கு பார்க்கும் கருவிகள் ( sights) இல்லாமல் ராக்கெட் லாஞ்சர்கள் வழங்கப்பட்டது.பார்க்கும் கருவிகள் இல்லாமல் எப்படி ஏவுவது என வீரர்கள்கேட்ட போது ராக்கெட் லாஞ்சர் ஓட்டை வழியாக பார்த்து பாக்கின் கவச வாகனங்களை தகருங்கள் என பதில் வந்தது.
( “see through the barrels and engage the Pakistani armour.'”) . முன்னனி நிலைகளில் இராஜ்புத்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
14 மற்றும்  20 ராஜ்புத் பில்லோரா சாவின்டா முனையில் இருந்தன.சர்வா பகுதியை கைப்பற்றியவுடன் 20வது இராஜ்புத் முன்னேறி 10 நாட்கள் தொடர்ந்து பாகிஸ்தானை ஊடுருவி சென்றனர்.17வது இராஜ்புத் லாகூரின் கிழக்கே பேடியான் பகுதியில் போரிட்டது.
1971 இந்தியா பாக் போர்
வங்கதேச விடுதலைப் போரில் இராஜ்புத் படைப்பிரிவு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.22வது இராஜ்புத் அகன்டபாரிய என்ற இடத்தை கைப்பற்றி டர்சனா என்ற இடத்தை கைப்பற்ற வழியமைத்து கொடுத்தது.குஸ்டியா பகுதியை ஒரு பிரைகேடு இராஜ்புத் வீரர்கள் தாக்கினர்.16வது இராஜ்புத் ஹிலி நடவடிக்கையில் பங்கேற்றனர்.4 மற்றும் 6வது இராஜ்புத் பல இடங்களில் போரிட்டனர்.கோலா பிளிஸ் பகுதியில் 6வது இராஜ்புத் படை கடும் எதிர்ப்பை சந்தித்தது இதில் நூறு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.ஆனால் வீரர்கள் விடாமல் போரிட்டு பாக்கின் 22வது பலூச் ரெஜிமென்டை சரணடைய வைத்தனர்.இதில் ஒரு வீரருக்கு வீரமரணத்திற்கு பிறகு வீர் சக்ரா மற்றும் இரு வீரர்களுக்கு சேனா விருது வழங்கப்பட்டது.
18வது இராஜ்புத் அகவுரா பகுதியில் போரிட்டனர்.மூன்று நாள் கடும் போருக்கு பிறகு அந்த பகுதியை கைப்பற்றி 16 டிசம்பர் அன்று டாக்காவிற்குள் நுழைந்தனர்.20வது இராஜ்புத் சௌடக்ராம் பகுதியை கைப்பற்றி பின்னர் சிட்டகாங்கிற்கு விரைந்தனர்.மேற்கு பகுதியில் 20வது இராஜ்புத் ( ஜோத்பூர் சர்தார்) இராஜஸ்தானுக்கு அனுப்பப்ட்டனர்.முதல் ஐந்து நாட்களில் 70கிமீ கடந்து சச்ரோவை அடைந்தது.அங்கு பசில்கா பகுதியில் 15வது இராஜ்புத் போரிட்டுக் கொண்டிருந்தது.இந்தப் போரில் லா/நா ட்ரிக்பால் சிங் வீரமரணத்திற்கு பிறகு மகாவீர் சக்ரா பெற்றார்.கல்ரா பகுதியில் 14 இராஜ்புத் ,5 மற்றும் 9வது இராஜ்புத் சம்ப் பகுதியிலும் போரிட்டது.இதில் 9வது இராஜ்புத் இரு எதிரி நிலைகளை கைப்பற்றியது.
1980களில் இராஜ்புத் பட்டாலியன்கள் காஷ்மீர்,பஞ்சாப்,வடகிழக்கில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.1980ல் புதிதாக தொடங்கப்பட்ட மெகானைஸ்டு இன்பான்ட்ரி ரெஜிமென்டிற்கு 18வது இராஜ்புத் மாற்றப்பட்டது.1988ல் பதேகரில் புதிதாக 27வது பட்டாலியன் தொடங்கப்பட்டது.27வது பட்டாலியன் கார்கில் போரில் முக்கிய பாய்ன்ட் 5770 மலைப் பகுதியை கைப்பற்றியது.
போருக்கு பிறகு ஐநா அமைதிப் படையாக எதியோபியா மற்றும் எரிட்ரியா நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இராஜ்புத் ரெஜிமென்ட் தலைமையகம் உத்திர பிரதேசத்தின் பதேபூரில் உள்ளது.1932ல் ஒரு நினைவகம் அங்கு திறக்கப்பட்டது.தற்போது இந்த ரெஜிமென்டின் 50%வீரர்கள் இராஜபுத்திரர்கள் மற்றும் 50% குர்ஜ்ஜார் வீரர்கள்.படைப்பிரிவின் பெயரில் ஐஎன்எஸ் இராஜ்புத் என்ற போர்க்கப்பல் கடற்படையில் உள்ளது.
வெற்றி படை

Leave a Reply

Your email address will not be published.