மேஜர் ராஷேஸ் சிங் அதிகாரி

மேஜர் ராஷேஸ் சிங் அதிகாரி

மேஜர் 18வது கிரானேடியர் படைப் பிரிவைச் சேர்ந்தவர்.கார்கில் போரின் போது டோலோலிங் பகுதியை கைப்பற்றைஇவரது பிரிவு அனுப்பப்பட்டது.டோலோலிங் 16,000 உயரமுள்ள மலைப்பகுதி.எனவே அதைக் கைப்பற்றுவது இந்தியப் படைகளுக்கு buy psychology essays online இன்றியமையாத ஒன்றாகும்.மலை மீது பாக் படைகள் பங்கர்கள் அமைத்திருந்து தனது இருப்பின் பாதுகாப்பை உறுதிசெய்திருந்தது.

தனது வீரர்களுடன் மலையைக் கைப்பற்ற தயாரான போது அவரது மனைவியின் கடிதம் அவருக்கு கிடைத்தது.ஆனால் அவர் பிரித்து படிக்கவில்லை.மற்ற வீரர்கள் வீட்டில் இருந்து கடிதம் வராதா என ஏங்கிய காலம்.ஏன் படிக்காமல் இருக்கீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு எனது மனைவி என்னுடைய உடல் நலத்தை பற்றி தான் எழுதியிருப்பர்.அதைப் படித்து நான் எனது உடல்நலம் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருக்க விரும்பவில்லை.டோலாலிங் பகுதியை மீட்கும் வரை எனது நினைவில் மாற்றம் இருக்ககூடாது என பதிலளித்தார்.நான் எனது தேசத்துக்கான போரில் வெல்வேன் என கூறியபடி தனது ஏகே 47 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் சுமந்த பையை தூக்கி கொண்டு களம் சென்றார்.

அவரை தெரிந்த சிலர் அவர் திரும்பபோவதில்லை என்றும் டோலோலிங் 90டிகிரி செங்குத்தானது எனவும் அதை மீட்பது மனிதனால் இயலாத காரியம் எனவும் கூறினர்.

ஆபரேசனின் போது டோலோலிங்கில் மேஜரின் படைப் பிரிவு கடும் தாக்குதலுக்கு உள்ளானது. முதல் நாள் ஒரு ஜீனயர் கமிசன் ஆபிசர் பாக் சினைப்பர் தாக்குதலுக்கு பலியானதால் முதல் நாள் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

அடுத்த நாள் இந்தியப் படைகள்மூர்க்கத்துடன் எதிரியின் பங்கரில் கிரேனைடு தாக்குதலில் ஈடுபட்டது.மேஜர் முன்னனியில் நின்று படைகளை வழிநடத்தினார். யூனிவர்சல் மெசின் துப்பாக்கியை வைத்து இரண்டு பாக் பங்கர்கைதொடர்ச்சியாக தாக்கினார்.

தாமதிக்காமல் ராக்கெட் லாஞ்சரை எடுத்து பங்கரை தாக்கினார்.தாக்கிகொண்டே பங்கரை நோக்கி சென்று இரண்டு வீரர்களை தாக்கி கொன்றார். அதே நேரத்தில் தன் வீரர்களுக்கு தொடர்சியான கட்டளைகள் இட்டார்.இந்த திறமை மிகப் பெரிய வரம் தான்.ஏனெனில் தொடர்ச்சியான துப்பாக்கி சூட்டில் மத்தியில் தானும் தாக்கி கொண்டு தனது வீரர்களுக்கும் உத்தரவிடுவது அபாரம்.மீடியம் மெசின் துப்பாக்கிகளை பாறைகளுக்கு நடுவே பொருத்தி தாக்கும் படி உத்தரவிட்டார்.
இந்த நேரத்தில் மேஜர் படுகாயம் அடைந்திருந்தார்.அவரை மீட்க வீரர்கள் முயன்ற போதும் மறுத்து தனது வீரர்களுடன் போரில் தொடர்ந்து ஈடுபட்டார்.அந்த நேரத்தில் மற்றுமொரு பங்கரை தாக்கி கைப்பற்றினார். படுகாயம் அடைந்த மேஜர் அந்த நேரத்தில் வீரமரணம் அடைந்தார் அதன் பிறகு பாய்ன்ட் 4590 கைப்பற்றப்பட்டது. போரில் காட்டிய வீரதீர சாகசம் காரணமாக மகாவீர் சக்ரா வழங்கி பெருமை கொண்டது இந்தியா.

அவரது திருவுடல் அவர் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.குடும்பமே உறைந்து நின்றது.அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.அவரது மனைவி அருகில் நின்று அவரை பார்த்தபடியே இருக்கிறார்.அவரது உடலை ஒருமுறை தொட்டுப்பார்க்கிறார்.அப்போது அவர் எழுதிய கடிதம் பிரிக்கப்படாமல் அவரது பாக்கெட்டில் இருக்கிறது.கதறி வெடித்து அழுகிறார்.அருகே இருந்த நிருபர்கள் ஏன் திடீரென அழுகிறீர்கள் என்று கேட்டனர. எனது கணவர் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு கடிதம் எழுதினார்.நான் கார்கில் போருக்கு செல்கிறேன்.திரும்ப வருவது உறுதியற்றது. அவ்வாறு நான் வரவில்லையென்றால் பிறக்க போகும் குழந்தையை கார்கில் மலைகளுக்கு கூட்டி வந்து இங்கு தான் உன் அப்பா வீரமரணம் அடைந்தார் என கூற வேண்டும் எனக் கூறியிருந்ததாக கூறினார்.

அதற்கு பதில் அளித்திருந்த அவரது மனைவி “நான் பெண் அல்லது ஆண் பிள்ளை பெற்றாலும் சரி, நீங்கள் திரும்ப வந்தால் நான் மகிழ்வேன் இல்லையென்றால் வீரமரணம் அடைந்த வீரரினா் மனைவி என பெருமை கொள்வேன்.பிறக்கும் குழந்தைக்கு கார்கில் கதை மட்டுமல்ல உங்களைப்போன்ற ஒரு வீரராக வளர்ப்பேன் ” என கூறினார்..

இவரைப்போன்ற வீரரால் தான் நாம் இன்று நிம்மதியாக வாழ்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.