Breaking News

ஆபரேசன் குக்ரி பாகம் 8

பாகம் 8 ஆபரேசன் குக்ரி

அடுத்த நாள் 16 ஜீலை 7மணி படைகள் வானுர்திகள் மூலம் வெளியேற இருந்தனர்.Mot-2 தற்காலிகமாக ஒரு ஹெலிபேடை உருவாக்கினர். 8:15க்கு , Mil Mi-8 பென்டெம்பு வந்துபடைகளை வெளியேற்றத் தொடங்கியது.12 முறை பறந்து படைகளை வெளியேற்றியது. Mech-1 கம்பெனி, Mot-1 கம்பெனி, சிறப்பு படை கம்பெனி , 18வது Grenadiers, மற்றும் 2 பிளாட்டூன் அதிவிரைவுப் படை ஆகியவை வானூர்தி உதவியுடன் வெளியேறினர்.9:30 மணிக்கு 50-60 தீவிரவாதிகள் நகரத்தின் வடக்கு பகுதியில் தென்பட்டனர்.தாக்கும் வானூர்திகள் அனுப்பப்பட்டன.அவர்களை தாக்கி வீழ்த்தியது வானூர்திகள்.மேலும் 5/8 கூர்காபிரிவு மற்றும் Mech 2 ன் இன்பாட்ரி வாகனங்கள் உதவியுடன் தீவிரவாதிகள் வேறருக்கப்பட்டனர்.10:30 க்கு கடைசி மி-8 வானூர்தி கிளம்பியது.அதற்கு முன் தீவிரவாதிகளின் பங்கர்கள் மற்றும் வெடிபொருள் கிடங்குகள் தகர்க்கப்பட்டன.

டருவிற்கு திரும்புதல்

அனைத்து வானூர்திகளும் கிளம்பியவுடன் மீதமமிருந்த கூர்கா வீரர்கள் மற்றும் டரு படைப் பிரிவு , 18வது கிரேனாடியர்களின் டி கம்பெனி,மீதமிருந்த அதிரடிப் படை வீரர்கள் கம்பெனி மற்றும் கைலாகுன் பிரிவின் வாகனங்கள் ஆகியவை Mot-2 முன்செல்ல படைகள் பின்நகர மொத்த பிரிவும் டருவிற்கு திரும்பின. இந்த மொத்த படைப் பிரிவிற்கும் ஒரு மி-35 தாக்கும் வானூர்தி பாதுகாப்பு அளித்தது. ஏரியா 3ல் உள்ள பாலத்தை நெருங்கியவுடன் சிறு எதிர்ப்பு சந்ததித்தது.அதன்பின் எவ்வித சண்டையும் இல்லாமல் Kuiva வை அடைந்தன படைகள். Kuiva,வை அடைந்ததும் Mi-35 வானூர்தி மற்றும் இன்பார்ட்ரி தாக்கும் வாகனங்கள் சந்தேகிக்கப்பட்ட எதிரியின் நிலைகள் மீது கண்மூடித்தனமாக சுட்டது.இது எதற்காக என்றால் எதிரிகள் உள்ளனரா என சோதனை செய்ய தான்.

Kuiva வை அடுத்து Bewabu செல்லும் வழியில் தடுப்பு இருப்பதாக ஸ்கௌட் வானூர்தி வீரர்களை எச்சரித்தது. 18வது கிரானேடியர்கள் சாலைகளை பாதுகாத்து நின்றது.இந்த நேரத்தில் தீவரவாதி தன் ராக்கெட் லாஞ்சரை இன்பாட்ட்ரி வாகனத்தின் மீது செலுத்தினான். உடனே Mi-35 வானுர்தி வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.மீதமுள்ள தீவிரவாதிகளை ரைபிள் வீரர்கள் மற்றும் இன்பார்ட்ரி வாகனங்கள் உதவியுடன் அழிக்கப்பட்டனர்.வானூர்திகள் வான் பாதுகாப்பு அளிக்க,படைகள் வேகமாக டருவை நோக்கி முனனேறினர்.

மணி 2: 30 Bewabu, அருகே இன்பான்ட்ரி வாகனங்கள் சிறு பொறியை தாண்டி செல்லும் போது இருமருங்கியில் ஆயுதம் தரித்த தீவிரவாதிகள் தாக்க தொடங்கினர்.உடனே காமான்டிங் ஆபிசர் நாம் “கொல்லப்படும் பகுதியில் (Killing zone) நுழைந்து விட்டோம் என உணர்ந்தார்.உடனே 4வது ரைபிள் பிளாட்டூனை தீவிரவாதிகளைைஅழிக்க அனுப்பினார்.துப்பாக்கிச் சண்டை 15நிமிடம் தொடர்ந்தது. அதே நேரம் வானூர்தியும் தீவிரவாதிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.அதே நேரம் முன்னே சென்ற 4வது பிளாட்டூன் வீரர்களுக்கு பாதுகாப்புக்காக 6வது பிளாட்டுன் மற்றும் INDENG பிரிவு இடையில் நின்று பாதுகாப்பு அளித்தது.தாக்குதல் முடிந்தவுடன் அனைவரும் ஒன்றினைந்தனர்.


அதே நேரம் 5/8வது கூர்கி வீரர்களுக்கும் Bewabu,அருகே தீவிரவாதிகளுக்கும் சண்டை தொடங்கியது.அந்த நேரத்தில் 18வது கிரானாடியர்கள் ஆறு கிமீ பின்னால் இருந்தனர்.அவர்களுக்கு துணையாக mech -2 ன் 2 BMPகள் mech -1 ன் 2 BRDMகள் பாதுகாப்பு அளித்தது.இந்தைநேரத்தில் தான் தீவிரவாதி ராக்கெட் லாஞ்சர் கொண்டு ஆயுதங்கள் ஏற்றி சென்ற வாகனத்தை தாக்கினர்.மேலும் ஒரு முறை Mi-35 வரவழைக்கப்பட்டு தீவாரவாதிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதில் காயம்பட்டவர்கள் செடக் வானூர்தி வரவழைக்கப்பட்டு அதில் கொண்டுசெல்லப்பட்டனர்.

கடைசியாக 5:30 க்கு அனைத்து பிரிவுகளும் பாதுகாப்பாக டருவை அடைந்தனர்.

இறுதி பாகம்

ஆபரேசன் குக்ரி

ஆபரேசன் முழுவெற்றி அடைந்தது.டருவினுள் இந்தியப் படைகள் நெஞ்சை நிமிர்த்தி நடந்தனர்.சியார்ரா லியான் மக்கள் ஆரவாரத்துடன் வீரர்களை வரவேற்றனர்.RUF தீவிரவாதிகள் மிகப் பெரிய இழப்பாக இந்த போர் அமைந்தது.அவர்கள் பல நூறு தீவாரவாதிகளைஇழந்தனர்.மேலும் ஐநா பாதுகாப்பு படைகளின் மிகப் பெரிய வெற்றியாக இது அமைந்தது.

சியார்ரா லியோன் மக்கள் மோவா ஆற்றின் கரையில் நம் வீரர்களை கவுரவிக்கும் பொருட்டு குக்ரி போர் நினைவாலயம் ஒன்றை எழுப்பியுள்ளனர்.

– இந்திய இராணுவச் செய்திகள்.

Leave a Reply

Your email address will not be published.