வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன் ஆபரேசன் குக்ரி- பாகம் 7

பாகம் 7 ஆபரேசன் குக்ரி

காலை 06:20.கைலாகுன் பகுதியில் இருந்த படைகள் வெளியேறினர். INDBATT-2, INDMECH QRC (Mech-2 Company), மற்ற 5/8th கூர்கா ரைபிள்ஸ் வீரர்கள் (Mot-2 Company) டருவில் கூட அடுத்த கட்ட திட்டத்தை தீட்டினர். 18வது கரேனாடியர்கள் உடன் Mech-2 ஐ சேர்ந்த சில இன்பான்ட்ரி தாக்கும் வாகனங்கள் மற்றும் ஆர்ட்டில்லரி உதவியுடன் தளம் மற்றும் சாலையைக் காத்து நின்றனர்.

உடனே மற்ற பிரிவுகள் Mech-2 ஐ சேர்ந்த இன்பான்ட்ரி தாக்கும் வாகனங்கள் முன்னே செல்ல வீரர்கள் சாலைகள் வழியாக முன்னகர்ந்தனர்.காலை 8:30 ல் டிகாேனோ அருகேபடைகள் சென்று கொண்டிருக்கும் போது வடக்குப் புறத்தில் இருந்து தீவிரவாதிகள் தாக்க தொடங்கினர்.முன்னே சென்ற இன்பான்ட்ரி வாகனங்கள் தீவிரவாதிகளை வீழ்த்த,படைகள் மேலும் முன்னேறி சென்றுகொண்டிருந்தது. மேலும் Bewobu, மற்றும் Kuiva, ஆகிய இரு இடங்களிலும் கடும் தாக்குதலை சந்தித்தாலும் எளிதில் அவைகளை முடியடித்தது. படைகள் பென்டெம்பு நோக்கி முன்னேறி வந்தது.இடையில் ஏரியா 3 என்ற இடத்தில் உள்ள பாலத்தை காக்க மூன்று மி-8 வானூர்தியில் பாரா வீரர்கள் வந்து பாலத்தின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.டருவில் இருந்து புறப்பட்ட படை பாலத்தை காத்து நின்ற பாரா வீரர்களுடன் இணைந்து பென்டெம்பு சென்றது.

Securing Pendembu

இரு பிரிவுகளும் பென்டெம்பு அடைந்ததும் ,அந்த நகரத்தை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க தயாரானார்கள்.இந்த பென்டெம்பு தான் தீவிரவாதிகளின் முதல் பிரைகேடின் தலைமையகம்.எனவே அவர்கள் நம் வீரர்களுடன் கடுமையாக போரிட்டனர். மணி தற்போது 1:30.இந்த நேரத்தில் தாக்கும் வானூர்திகள் களத்தில் குதித்தது.நகரத்தின் மீது பறந்து தீவிரவாதிகள் மீது துல்லியத் தாக்குதல் தொடுத்தது. Mot-2 கம்பெனி தீவிரவாதிகளோடு போர் புரிந்து கொண்டே அந்த நகரத்தில் இருந்த கிட்டத்தட்ட 300 வீடுகளை காத்தனர்.Mech-2 நகரத்தின் வடக்கு நோக்கி முன்னேறி தீவிரவாதிகளை துவம்சம் செய்யது. தென்மேற்கு பகுதியை Mot-2 தன்னிடம் உள்ள இன்பான்ட்ரா வாகனங்கள் மூலம் மீட்டது.மேலும் ரைபிள் வீரர்கள் உதவியுடன் வீடு வீடாக தேடி எதிரியை காலி செய்தது.மேலும் Mot-2 ன் 4வது பிளாட்டூன் நகரத்தின் தென்மேற்கு பகுதியில் இருந்த தீவிரவாதிகளை கொன்றது.6வது பிளாட்டுன் மேலும் சில பகுதிகளை தாக்கி தீவிரவாதிகளை அழித்தது. அதன்பின் தென்மேற்கு மூலையில் எல்லா பிரிவுகளும் இணைந்தனர்.மாலை நெருங்கியதால் எல்லா படைகளும் ஒன்றினைந்து ஒரு தற்காப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.மேலும் ஒரு நல்ல வான் தலைமை ஏற்பட்டு இரவு முழுவதும் நகத்தின் மீது ரோந்து சென்றது.

மணி மலை 4:30. கைலகுன்னிலிருந்து பென்டெம்பு நோக்கி வந்த பிரிவு 5:30 க்கு டரு பிரிவை தொடர்பு கொண்டது.உடனே 5/8 கூர்கா ரைபிள்ஸ் கமாண்டிங் ஆபிசர் தன் பிரிவினருடன் காட்டுப் பகுதி வழியாக முன்னேறி கைலாகுன் பிரிவை சந்தித்து,முழுப் படையும் 7 மணிக்கு பென்டெம்பு திரும்பின.பென்டெம்பு நகரத்தில் சிறப்பான தற்காப்பை படைப்பிரிவுகள் ஏற்படுத்தியிருந்தன.நகரத்தின் ஏதேனும் பகுதியில் இருந்து தற்காப்பு பகுதியை தீவிரவாதிகள் தாக்கினால் நமதுவீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.மேலும் தீவிரவாதிகள் உபயோகிக்கும் வழிகளை இராணுவத்தின் ஸ்கௌட் வானூர்தி தொடர்ந்து கண்கானித்து வந்தது. இதில் இரண்டு முறை தீவிரவாத குழு நகரத்தினுள் நுழைய முற்படும் போது மி-35 தாக்கும் வானூர்தி ராக்கெட் மற்றும் துப்பாக்கி கொண்டு தாக்கியது. நகரத்தினுள் நுழையும் வழிகள் அனைத்திலும் 105மிமீ லைட் ஃபீல்டு மோர்ட்டார்கள் கொண்டு பாதுகாக்கப்பட்டது.இரவு முழுவதும் வீரர்கள் நகரத்தை பாதுகாத்து நின்றனர்.

தொடரும்.

– இந்திய இராணுவச் செய்திகள்..

Leave a Reply

Your email address will not be published.