பாகம் -6 ஆபரேசன் குக்ரி
இன்ட்பாட் முன்னும் பின்னும் சிறப்பு படை வீரர்கள் சூழ இடத்தை விட்டு வெளியேறியது.தற்போது தீவிரவாதிகள் உசார் அடைந்தனர்.எனவே பாதுகாப்பாக வெளியேறுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.தற்போது விழித்துக் கொண்ட தீவிரவாதிகள் படை வீரர்களை நெருங்கும் நேரத்தை குறைக்க வழி நெடிகிலும் கண்ணிவெடிகளை நம் வீரர்கள் புதைக்க தொடங்கினர்.இந்த நேரத்தில் நடந்த சண்டையில் மட்டும் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
காலை 9மணிக்கு வானிலை தெளிவானது.தற்போது வீரர்களுக்கு வானூர்தி உதவிகள் கிடைக்கப்பெற்றது.இந்த நேரத்தில் தீவிரவாதிகளும் ஒன்றினைந்தனர்.இதனால் முன்னேறும் பிரிவு முன்னே செல்ல தாமதம் ஏற்பட்டது.இந்த நேரத்தில் மி-35 தாக்கும் வானூர்தி உதவியுன்(வானிலிருந்து எதிரியை தாக்கும்) முன்னகர்ந்தனர்.9:45க்கு தாக்கும் வானூர்தி பாதுகாப்புடன் மி-8 வானூர்தி வந்து இன்பாட் 2 மற்றும் 18 கிரனேடிய வீரர்கள் கெய்குன் பகுதிக்கு கொண்டு சென்றது.மற்ற பிரிவுகள் கைலாகுன் படை பிரிவு வரும் வரை காத்திருந்தனர்.
10:20 மணித்துளியில் கெய்குன்னில் தரை இறக்கப்பட்ட 18வது வீரர்களின் தொடர்பை பெற்றனர் சிறப்பு படை வீரர்கள்.குறித்த நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர்கள் தங்கள் ஆபரேசனை முடித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருந்தனர்.கிரனேடியர் போர்ஸ் காமாண்டர் சிறப்பு படை வீரர் கமாண்டரிடம் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதன் பிறகு இரு பிரிவுகளும் இணைந்து பென்தெம்பு நோக்கி முன்னேறினர்.வழியில் சிறு எதிர்ப்புகளை எதிர்கொண்டாலும் அவற்றை தவிடு பொடியாக்கி முன்னேறினர்.
தொடரும்….
– இந்திய இராணுவச் செய்திகள்..