பாகம் 5 ஆபரேசன் குக்ரி
ஜீலை 15 நேரம் காலை 6 மணி,சூரிய உதயத்திற்கு முன்பாகவே 2வது பாரா கமாண்டோ பிரிவைச் சேர்ந்த 80 கமாண்டோக்கள் பிரிட்டனின் 2 சினூக் வானூர்தி உதவியுடன் எதிரியின் பகுதியில் தரை இறக்கப்பட்டனர். சாதகமில்லாசூழ்நிலையில் வான் தாக்குதலும் தொடங்கியது.கடும் மழை ,கண்ணில் எதும் அகப்பட வில்லை,இதனால் வானூர்திகள் செயல்பட கடினமாக இருந்தது.இதனால் வானூர்திகள் திரும்பின.மேலும் ஆர்டில்லரி உதவியோ,விமான உதவியோ இல்லாமல் தான் சண்டை தொடங்கியது.40 கமாண்டோக்கள் ஜிமிலா என்ற கிராமத்திலும், 34 கமாண்டோக்கள் பன்டஜ்ஜூமா ட்ராக் ஜங்க்சன் அருகிலும்,ஆறு கமாண்டோக்கள் நேரடியாக வீரர்களை விடுவிக்க நேரடியாக கேப்பிற்கும் அனுப்பப்பட்டனர்.கடைசி நேரத்தில் திட்டம் மாறியது.வானூர்திகளால் தட்வெப்பநிலை காரணமாகசெயல்பட முடியாமல் போயிற்று.உதவிக்கு வானூர்திகள் இல்லாததால் திட்டத்தில் மாற்றம். அதன் காரணமாக முற்றுகையை உடைக்க வந்த குழுவின் இளவயதுடைய கமாண்டோ தன் குழுவை நகரத்தின் மத்தியில் செல்ல முன்னின்று படை நடத்தினார்.
அதே நேரம் 40 பேர் கொண்ட கமாண்டோ குழு தீவிரவாத குழுவிடம் இருந்து கடும் எதிர்த்தாக்குதலை பெற்றது.எனினும் எதிர்ப்பை முறியடித்து கைலகுன் நகரத்தின் மத்திய பகுதியை கைப்பற்றியது.
அதே நேரம் இரண்டாவது குழு இரு குழுக்களாக பிரிந்து முதல் குழு ட்ராக் ஜங்சனை கைப்பற்றியது.இரண்டாவது குழு முன்னே சென்று கெனேவா செல்லும் பகுதியை பாதுகாப்புகுள் கொண்டு வந்தது.நகரத்தின் மத்திய பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.இப்போது அந்த சினூக் வானூர்தி வந்து முற்றுகைக்குள் சிக்கியிருந்த இராணுவ உயரதிகாரிகளை மீட்டது.இப்போது ஆறு பேர் கொண்ட கமாண்டோ ,40 பேர் குழுவை தொடர்பு கொண்டது. அந்த 40 பேர் கொண்ட குழு நான்கு புறத்திலும் துப்பாக்கிச் சூட்டை எதிர்த்து நின்றிருந்தது.
தொடரும்…
– இந்திய இராணுவச் செய்திகள்.