வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன் ஆபரேசன் குக்ரி- பாகம் 4

பாகம் 4 ஆபரேசன் குக்ரி

படை குவிப்பு

தாக்குதலின் முதல் கட்டம் படைக் குவிப்பு தான்.13 மற்றும் 15ம் தேதிகளில் UNAMSIL படைகள் Daru மற்றும் Kenewa ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டன.மற்ற ஐநா படைகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்த Daru பகுதியில் இந்திய மற்றும் பிரிட்டன் விமானப் படை உதவியுடன் படைக்குவிப்பு நிகழ்த்தப்பட்டன.14 ஜீலை நள்ளிரவில் படைக்குவிப்பு முழுமையடைந்தது.

2 பாரா சிறப்பு படை வீரர்களின் பங்கு

இந்த ஆபரேசன் VUCA சூழ்நிலையில் தான் நடைபெற்றாக வேண்டியிருந்தது.அதாவது அந்த பகுதி நிலையில்லா தன்மை பெற்றிருந்தது.மிகவும் கடினமான சூழ்நிலை.அந்நிலம் பற்றிய அமைப்பு யாரிடமும் தெளிவாக இல்லை என்னும் பட்சத்தில் டூரிஸ்ட் மேப் உதவியுடனே திட்டங்கள் தீட்டப்பட்டன.அருகில் உள்ள நட்பு நாட்டு இராணுவத்திடம் இருந்து ஆயுதங்கள் பெறப்பட்டன. 2 பாரா வீரர்கள் (SF) சில அரிய உளவுத் தகவல்களை பெற்றிருந்தனர்.எப்படியென்றால் மாறுவேடம் அணிந்து உளவு பார்த்தனர்.சில கமாண்டோக்கள் ஏழு நாள் வரை மாறுவேடம் அணிந்து எதிரி நடமாட்டங்கள் மற்றும் அவர்களின் படைமுகாம்கள் குறித்தும் அறிந்து கொண்டனர்.அந்த பகுதிகளுக்கு செல்லும் வரைபடைத்தை தயார் செய்தனர்.இப்படியான அந்நிய மண்ணில் இந்தியப் படை செய்ய உள்ள ஒரு மாபெறும் தாக்குதலுக்கு தங்களை தயார் செய்து கொண்டனர்.

Kailahun ல் உள்ள படைப்பிரிவிற்கு திட்டம் பற்றி விளக்கப்பட்டது.மேலும் சாட்டிலைட் போன்கள் மூலம் தலைமையகத்துடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

தீவிரவாதிகள் ஒட்டுக்கேட்க கூடும் என்ற காரணத்தால் மலையாள மொழியில் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது. ஆபரேசன் தொடங்கியவுடன் கைலகுன்னில் உள்ள பிரிவு நகரத்தில் 500 நுழைந்து முதலில் இரு விமானத்தளங்களை கைப்பற்றி பாதுகாக்க வேண்டும்.அப்போது நம் வானூர்திகள் தாக்க அது ஏதுவாக அமையும்.

தொடரும்….

– இந்திய இராணுவச் செய்திகள்.

Leave a Reply

Your email address will not be published.