Breaking News

2019ன் சிறந்து அணிவகுத்த பிரிவாக தேர்தெடுக்கப்பட்ட சிஆர்பிஎப்

2019ன் சிறந்து அணிவகுத்த பிரிவாக தேர்தெடுக்கப்பட்ட சிஆர்பிஎப்

மத்திய ஆயுதம் தாங்கிய படை (CAPF) பிரிவுகளில் மிகப் பெரிய படை தான்  இந்த சிஆர்பிஎப்  (CRPF) படை.

எண்ணிக்கையில் பல நாட்டு முன்னனி இராணுவத்தை விட மிகப் பெரிய படை.

கிட்டத்தட்ட மூன்று லட்சம் வீரர்கள் கொண்டு இந்தியாவின் உள்நாட்டு அமைதியை செவ்வனே காக்கும் சிறந்த படை

தங்களுக்கென்றே தனிச்சிறப்பான கமாண்டாே பிரிவைக் கொண்டது.சிறந்த காட்டுப்பகுதியில் போர்வீரர்கள் படை என மெச்சும் கோப்ரா படை தான் அந்த கமாண்டாே படை.

சேவை மற்றும் நேர்மை என்பதை தங்கள் தாரக மந்திரமாக கொண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அமைதிகாக்கும் பணியில் ஈடுபடுகின்றன.

தீவிரவாத எதிர்ப்பா ! நக்சல் எதிர்ப்பா ! தேர்தல் வருகிறதா ! தனிநபர் பாதுகாப்பு வேண்டுமா ! இதோ இருக்கிறது சிஆர்பிஎப் என முதலில் ஒலிப்பது இந்த வீரர்கள் படை தான்.

20,000கோடி வருடம் இந்த படைக்கு ஒதுக்கப்படுகிறது.சில பேர் சிஆர்பிஎப் ஐ இராணுவம் என நினைப்பதுண்டு.சிஆர்பிஎப் மத்திய அரசின் கீழ் வருகிறது.

சுதந்திரத்திற்கு முன்பே உதித்த ஒரு சில படைகளில் இந்த படையும் ஒன்று.

இராணுவத்தை போலவே பல வீரரகள் தன்னலமின்றி நாட்டிற்காக வீரமரணம் அடைந்துள்ளனர்.சேட்டன் சீட்டா போன்ற வீரர்களை நாம் எளிதில் மறந்து விட முடியாது.

அதே போல் கோப்ரா படை ஆசியாவில் சிறந்த காடுசார்ந்த போர்முறை படையாக திகழ்கிறது.சொல்லைப் போலவே செயலிலும் சிறந்தது.மாவோ மற்றும் நக்சல் தீவிரவாதம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல் சிஆர்பிஎப்-ல் மற்றுமொரு துணைப் பிரிவு உள்ளது.ரேபிட் ஆக்சன் போர்ஸ் அல்லது அதிவிரைவுப் படை என்ற ஒரு பிரிவு.சமூக மோதல்கள் போன்ற அமைதியின்மை நிகழும் இடங்களில் இந்த நீலச்சட்டை காரர்களை காணலாம்.ஐநா அமைதிப் படையில் கூட இந்த படைப் பிரிவு பணிபுரிந்து வருகிறது.99 முதல் 108 வரை உள்ள சிஆர்பிஎப் பட்டாலியன்கள் RAF ன் கீழ் வருகிறது.

கிட்தட்ட 1540வீரர்கள் கொண்ட பாராளுமன்ற பாதுகாப்பு படை பிரிவு ஒன்று பாராளுமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இது இந்தியாவின் மற்ற படைகளுடன் கூட்டாக இணைந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

சிஆர்பிஎப்-ல் பெண்களுக்கென்றே மூன்று  மகிளா பட்டாலியன்கள் உள்ளன.காஷ்மீர்,மணிப்பூர் என பல இடங்களில் இந்த படை பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதே போல பத்து பட்டாலியன்கள் கோப்ரா பிரிவில் இணைக்கப்பட்டு நக்சல்கை வேட்டையாட அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்தப் படை நான்கு சௌரிய சக்ரா விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிஆர்பிஎப் QRT என்ற சிறப்பு படை காஷ்மீர் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.அதிசிறந்த படையாக இது திகழ்ந்து வருகிறது.பிகே பாண்டா போன்ற வீரமிக்க வீரர்களை உருவாக்கிய படை

Leave a Reply

Your email address will not be published.