பாகம் 2 ஆபரேசன் குக்ரி
ஆபரேசன் குக்ரி:
RUB எனப்படும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக சியாரா லியோன் அரசு நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக ஐநா ஒரு சிறு படைப்பிரிவை அந்நாட்டிற்கு அனுப்பிவைத்தது.INDBATT-1 எனக் குறிக்கப்பட்ட அதில் 5/8வது கூர்கா ரைபிள்ஸ் வீரர்களும் 14 வது மற்றும் 23வது மெகானைஸ்டு இன்பாட்ரி குழுவும் இடம் பெற்றிருந்தது. அதில் 2 கம்பெனி ரைபிள் பிரிவுகள் அதிவிரைவுப் படையாக வைக்கப்பட்டிருந்தது.மேலும் 2வது பாரா கமாண்டோ வீரர்களும் அதில் இடம் பெற்றிருந்தனர்.
ஏப்ரல் 2000ம் ஆண்டு மத்தியில் இந்த INDBATT-1 பிரிவின் இரண்டு கம்பெனி வீரர்கள் கைலாகுன் (Kailahun,) என்ற இடத்திற்கு பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.மற்ற பிரிவுகள் டாரு ( Daru) என்ற இடத்தில் நிலைநிறுத்தப்பட்டன.
மே 1 ம் தேதி அந்த RUF தீவிரவாதிகள் மகேனி என்ற இடத்தில் KENBATT (மற்றொரு ஐநா பிரிவு INDBATT போல,அதாவது கென்ய நாட்டு பட்டாலியன் (Kenyan battalion) வீரர்களை தாக்கினர்.தொலைதொடர்பு வசதியின்மை காரணமாக அவர்களால் நம் INDBATT-1 ஐ தொடர்பு கொள்ள முடியவில்லை.மேலும் கைலாகுன் இடத்தில் நடந்த தீவிரவாதிகளுடனான சந்திப்பின் போது கென்யன் கமாண்டர்கள் சிலரை அவர்கள் பிடித்து சென்று விட்டனர்.சில நாட்களில் அவர்கள் நம் INDBATT-1 மற்றும் பொதுமக்கள் அழுத்தத்தால் விடுவித்தனர்.
நிலைமை மோசமானது தீவரவாதிகள் கிட்டத்தட்ட 500 கென்ய அமைதிப் படை வீரர்களை கொன்றனர்.மேலும் அவர்கள் ஃப்ரீடவுன் (Freetown) என்ற இடத்தை நோக்கி வேகமாகமுன்னேறி வந்தனர்.நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த பிரிட்டிஷ் அமைதிப்படை வீரர்கள் Freetownல் உள்ள மக்களை இடம் மாாற்றினர்.மேலும் இந்தியாவின் INDBATT-1 தனது அதிவிரைவுப் படையை மாக்புராகா என்ற இடத்திற்கு அனுப்பி பல தடைகளையும் மீறி நம் படை பல கென்யர்களை மீட்டது.எனினும் நம் படைப் பிரிவின் ஒரு பிரிவாக கைலாகுன் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு கம்பெனி 5/8 வது கூர்கா ரைபிள்ஸ் வீரர்களை தீவிரவாதிகள் முதல் பிரைகேடு படையணி முற்றுகையிட்டது.
நம் வீரர்களை மீட்க முழு முயற்சியில் இறங்கியது நமது படைப்பிரிவு.கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன.
தொடரும்…
– இந்திய இராணுவச் செய்திகள்…