வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன் ஆபரேசன் குக்ரி- பாகம் 1

வெளிநாட்டில் இந்திய நடத்திய ஆபரேசன்  ஆபரேசன் குக்ரி- பாகம் 1

ஆபரேசன் குக்ரி என்பது ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பாதுகாப்பு துறையால் சியார்ரா லியோன் நாட்டில் நடத்தப்பட்ட பல நாடுகள் கலந்து ஈடுபட்ட ஒரு தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன் ஆகும்.இந்த ஆபரேசனில் இந்தியா,பிரிட்டன்,நைஜீரியா,கானா ஆகிய நாட்டின் படைப்பிரிவுகள்(ஐநா கட்டுப்பாட்டில் உள்ளவை) கலந்து கொண்டன.RUF எனப்படும் தீவிரவாத குழு ஐநா படையின் ஒரு பிரிவான இரண்டு பட்டாலியன் 5/8 கூர்கா ரைபிள்ஸ் வீரர்கள் குழுவை கைலாகுன் என்ற இடத்தில் (இந்தியா) முற்றுகையிட்டு இருந்தனர்.இந்த ஆபரேசனின் முக்கிய குறிக்கோள் இந்த முற்றுகையை முறியடிப்பது தான் மற்றும் அதன் பிறகு டாரு என்ற இடத்தில் தீவிரவாதிகளுக்கும் வீரர்களுக்கும் பெரும் போர் மூண்டது.

சியாரா லியோனில் கடந்த ஜீலை 2000ம் ஆண்டு இந்த தாக்குதல் நடந்தது. இது லெப். ஜெனரல் நிர்மல் சந்த் (Director General Military Operations)
மேஜர் ஜெனரல் V.K. ஜெட்லி
கலோனல் சதிஸ்குமார் (Commanding Officer of 5/8 Gurkha Rifles)மற்றும் குரூப் கேப்டன் பிஜேந்தர் சிங் (விமானப் படை)ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ஐநா பிரிவில் பக்கம் சுமார் 2000 முதல் 2500 வீரர்கள் வரை இடம் பெற்றனர்.அதாவது 223
5/8th கூர்கா ரைபிள்ஸ் வீரர்கள்( முற்றுகையில் சிக்கியிருந்தவர்கள்).டாரு என்ற இடத்தில் ஆறு கம்பெனி 5/8th கூர்கா வீரர்கள், 14வது Mechanised Infantry பட்டாலியன் ,பாரா கமாண்டோக்கள் மற்றும் Mechanised Infantry அடங்கிய அதிவிரைவு குழு மற்றும் 18வது கிரேனாடியர் குழு, ஒரு கம்பெனி என்ஜினியர் குழு மற்றும் 2வது பிரிவு பாரா கமாண்டோ வீரர்கள்.

மேலும் சில மோர்ட்டார்கள் மற்றும் இலகுரக துப்பாக்கிகள்.

விமானப்படை
3 Mil Mi-35 தாக்கும் வானூர்திகள் 8 Mil Mi-8 போக்குவரத்து வானூர்திகள்

2 HAL Chetaks வானூர்திகள்
இரு சின்னூக் வானூர்தி
ஒரு C-130 Hercules விமானம்

மற்றும் ரிசர்வ் பிரிவாக இரண்டு கம்பெனி கானா நாட்டு வீரர்கள் மற்றும் இரண்டு கம்பெனி நைஜீரியா நாட்டு வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர்.

தீவிரவாதிகள் பக்கம் 2000 முதல் 5000 பேர் ஐந்து பட்டாலியன்களாக பிரிந்து இருந்தனர்.

தொடரும்….

– இந்திய இராணுவச் செய்திகள்.

Leave a Reply

Your email address will not be published.