Highlight News
World News
Trending Fashion of This Year
Sports Events Of This Month
Editor Picks
இந்திய கடலோர காவல் படையின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு போதைப் பொருள் பறிமுதல் !!
கடந்த திங்கட்கிழமை அன்று இந்திய கடலோர காவல் படையின் கப்பல்கள் வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான மீன் பிடி படகு ஒன்றில் இருந்து சுமார் 6000 கிலோ அளவுக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருளான மெத்தாமி பட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது இந்திய கடலோர காவல் படையின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும். இந்தப் போதை பொருட்கள் தலா 2 கிலோ […]
ரஷ்யா மீது முதல் தாக்குதல் நடத்த தயாராக இருக்க வேண்டும்; மேற்கத்திய தொழில் நிறுவனங்கள் ஒரு போருக்கு ஆயத்தமாக வேண்டும் மூத்த நேட்டோ ராணுவ அதிகாரி !!
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் தலைமை பொறுப்பான பொதுச் செயலாளர் பதவிக்கு பிறகு இரண்டாவது மிகப்பெரிய பொறுப்புநேட்டோ ராணுவ கமிட்டி தலைவர் பதவி ஆகும். இந்த பொறுப்பில் உள்ளவர் தான் முன்னாள் நெதர்லாந்து ராணுவ தலைமை தளபதி அட்மிரல் ராப் பாவ்ர் இவர் தற்போது நேட்டோவின் ஒட்டுமொத்த ராணுவ விவகாரங்களுக்கும் பொறுப்பானவர் ஆவார். சமீபத்தில் இவர் பெல்ஜியம் தலைநகர் பிரேசல்ஸ் நகரில் நடைபெற்ற EPC European Policy Centre ஐரோப்பிய கொள்கை மைய கருத்தரங்கில் கலந்து […]
சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நிலைநிறுத்தப்படும் ஜப்பானிய படைகள் !!
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனா தான்தோன்றித்தனமாக செயல்படுவதை தொடர்ந்தும் சீன ராணுவம் இந்தோ பசிபிக் பிராந்தியம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சீனாவின் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்று வருவதை தொடர்ந்தும் ஜப்பான் அரசு ஜப்பான் படைகளை ஆஸ்திரேலியாவில் நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது இந்த அறிவிப்பு சமீபத்தில் ஆஸ்திரேலியா ஜப்பானிய மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பிற்கு பிறகு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மால்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது அமெரிக்க […]
மிக விரைவில் உக்ரைன் போரில் களமிறங்க உள்ள வடகொரிய வீரர்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் !!
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின் மிக விரைவில் ரஷ்யாவில் உள்ள வடகொரிய ராணுவ வீரர்கள் உக்கிரன் போரில் களமிறங்க உள்ளதாகவும் தற்போது சுமார் 10,000 வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ளதாகவும் இவர்கள் ரஷ்ய படையணிகளில் இணைக்கப்பட்டு வருவதாகவும் கடந்த சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார். அதாவது பிஜி நாட்டிற்கு அதிகாரப்பூர்வ பயணமாக சென்றிருந்த அவர் அங்கு செய்தியாளர்கள் இடையே வடகொரியா ராணுவ வீரர்கள் எந்தெந்த பணிகளுக்கு பயிற்சி பெற்றிருக்கிறார்களோ அந்தப் பணிகளை மேற்கொள்ளும் […]
அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணையை நீர் மூழ்கியிலிருந்து ஏவி சோதனை செய்த இந்தியா !!
நேற்று அதாவது புதன்கிழமை அன்று இந்திய கடற்படையின் புத்தம் புதிய மற்றும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர் மூழ்கி கப்பலான INS ARIGHAT ஐ என் எஸ் அரிகாத் நீர் மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுத திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பலிஸ்டிக் ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சோதனை செய்யப்பட்ட ஏவுகணை திட […]
ராணுவ கூட்டு பயிற்சிகளை அதிகரிக்க இந்தியா ரஷ்யா முடிவு !!
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சமீபத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நான்காவது ராணுவ ஒத்துழைப்புக்கான செயல்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த அமைப்பு இரு நாட்டு அரசுகளால் ராணுவ ஒத்துழைப்பு மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு விவகாரங்களை மேற்பார்வையிடவும் செயல்படுத்தவும் உருவாக்கப்பட்டதாகும் ஒவ்வொரு ஆண்டும் இந்தக் குழு சந்தித்து ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான காரியங்களை விவாதித்து அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த ஆண்டுக்கான சந்திப்பு நடைபெற்று முடிந்த பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் […]
இந்தியா சிங்கப்பூர் இடையேயான அக்னி வீரர் 2024 கூட்டு பயிற்சிகள் துவக்கம் !!
இந்தியா மற்றும் சிங்கப்பூர் தரைப்படைகள் இடையேயான AGNI WARRIOR 2024 அக்னி வீரர் 2024 இருதரப்பு கூட்டு பயிற்சிகள் 28 முதல் வருகிற முப்பதாம் தேதி வரை மகாராஷ்டிரா மாநிலம் தேவலாலியில் இந்திய தரப்படையின் பீரங்கி படை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளன. இந்த இருதரப்பு கூட்டுப் பயிற்சியின் மிக முக்கியமான நோக்கம் இந்திய மற்றும் சிங்கப்பூர் தரை படைகளின் பீரங்கி படைகள் இடையேயான தொழில்முறை சார்ந்த ஒத்துழைப்புகளை அதிகப்படுத்துவதாகும். இது தவிர இரண்டு நாட்டு தரை […]
துக்காராம் கோபால் ஓம்பில் அசோக சக்ரா
துக்காராம் அவர்கள் மகாராஷ்டிரா காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றியவர். இந்திய ராணுவத்தின் சிக்னல் கார்ப்சில் பணியாற்றிய பிறகு 1991இல் மகாராஷ்டிரா காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியில் இணைந்தார் 2008ல் பயங்கரவாதிகள் மும்பையில் தாக்கியபோது துணை ஆய்வாளராக துக்காரம் அவர்கள் D.B. மார்க் காவல் நிலையத்தில் அன்று இரவு பணி செய்து கொண்டிருந்தார். அன்று நடுஇரவில் வயர்லெஸ் போனில் இரண்டு பயங்கரவாதிகள் marine drive நோக்கி செல்வதாக தகவல் கிடைத்தது. இதைக் கேட்ட துக்காராம் அவர்கள் பயங்கரவாதிகளை தடுப்பதற்காக சாலையில் […]
மூன்றாவது உலகப்போர் துவங்கி விட்டதாக கருதுகிறேன் – முன்னாள் உக்ரைன் ராணுவ தளபதி !!
முன்னாள் உக்ரைன் தலைமை ராணுவ தளபதியும் இங்கிலாந்துக்கான இந்நாள் உக்ரைன் தூதுவருமான ஜெனரல் வலெரி சலூஸ்னி சமீபத்தில் நடைபெற்ற உக்ரைன்ஸ்கா பிராவ்தா எனும் புகழ்பெற்ற உக்ரைனிய பத்திரிக்கை ஊடகத்தின் UP100 விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் இந்த 2024 ஆம் ஆண்டில் மூன்றாவது உலகப்போர் துவங்கி விட்டதாக நாம் கருதுவதற்கான அனைத்து காரணிகளும் உள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளார். அதாவது கடந்த இரண்டு ஆண்டு காலமாக உக்கிரேன் உடன் ரஷ்யா […]
உக்ரேன் போர் உலகளாவிய போராக மாற்றமடைந்து வருகிறது-ரஷ்ய அதிபர் புடின் !!
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளின் அதிநவீன தொலைதூர தாக்குதல் குரூஸ் ஏவுகணைகளை உக்ரேன் ராணுவம் பயன்படுத்தி ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்த அனுமதி அளித்ததை தொடர்ந்து உக்ரேன் போர் உலகளாவிய போராக மாற்றமடைந்து வருவதாகவும் இது இப்படியே தொடர்ந்தால் மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த கூடும் எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் உக்ரேன் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தயாரிப்பு அதிநவீன தொலைதூர தாக்குதல் குரூஸ் […]