தொழில்நுட்பம்

DRDOவின் அதிநவீன கொரோனா சார்ந்த கண்டுபிடிப்புகள் !!

April 13, 2020

தற்போது கொரொனாவால் உலகம் முழுவதும் சூழ்நிலை மிகவும் மோசமாகி வருகிறது. இந்தியாவிலும் பலர் குணமாகி வந்தாலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே மருத்துவ கட்டமைப்பை துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புகள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் DRDO பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி உள்ளது, அதில் சில – VISOR BASED FULL FACE SHIELD ISOLATION SHELTER MOBILE […]

Read More

ஆளில்லா விமான திரள் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டும் இந்திய விமானப்படை !!

April 12, 2020

அமெரிக்காவின் DARPA – Defense Advanced Research Projects Agency போர்க்களத்தில் பயன்படுத்தும் வகையிலான சில ஆளில்லா விமான திரள் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது என பெண்டகனின் கொள்முதல் பிரிவு தலைவர் எல்லன் லார்ட் கூறினார். அதில் ஒரு திட்டம் இந்திய விமானப்படையின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக இந்திய விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப்படை இத்தகைய திட்டங்களை இணைந்து மேற்கொள்வதை பற்றி விவாதித்து உள்ளன. இதன்படி குறைந்த செலவில் நமது சி130ஜெ மற்றும் […]

Read More

சரஸ் மார்க் 2 விமானத்தை தயாரிக்க உள்ள இந்தியா !!

April 12, 2020

உள்நாட்டிலேயே ஒரு சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து விமானத்தை தயாரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவினால் உருவாகியது தான் சரஸ் விமானம். தற்போது HAL மற்றும் NAL நிறுவனங்கள் சரஸ் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமான சரஸ் மார்க்2 விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த விமானத்தில் ஏற்கனவே உள்ள PUSHER PROPELLERஐ களைந்து விட்டு புதிய TRACTOR MOUNTED PROPELLERஐ பொருத்த திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசின் “உடான்” திட்டம் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளை விமான போக்குவரத்து மூலமாக இணைக்க […]

Read More

மிக்21, சுகோய்30 மிராஜ்2000 விமானங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட இலகுரக தலைக்கவச சோதனை வெற்றி !!

April 12, 2020

மிக்21, மிராஜ்2000 மற்றும் சுகோய் விமானங்களுக்கான அதிநவீன இலகுரக ஒருங்கிணைந்த தலைக்கவசம் ஃபிரான்ஸில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையானது இந்திய விமானப்படையின் தர நிர்ணயத்தின்படி 8 வகையான தர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த தலைகவசத்தில் பாலிகார்பனேட் வைசர் தொழில்நுட்பம் மற்றும் அதிக அழுத்த ஆக்ஸிஜன் சுவாச கருவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

Read More

மலேசிய விமான ஒப்பந்த சோதனையில் சிறப்பாக செயல்பட்ட தேஜஸ் !!

April 11, 2020

இந்திய எதிர்ப்பு நிலை கொண்ட முன்னாள் மலேசிய பிரதமர் மஹாதிர் பின் மொஹம்மது தற்போது பதவி விலகியதை அடுத்து தற்போது மலேசிய பிரதமராக பதவி ஏற்றுள்ள முஹியிதின் யாசின் இந்தியாவுடனான உறவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புகிறார். இதன் மூலம் மறுபடியும் இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தத்தில் வாய்ப்புகள் அதிகரித்து உள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ” மலேசிய விமானப்படைக்கான இலகுரக போர் விமான ஒப்பந்த சோதனையில் நமது தேஜாஸ் போட்டியில் […]

Read More

விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மேம்பாட்டு ஒப்பந்தம் !!

April 9, 2020

இந்தியா முன்பு சோவியத் ஒன்றியத்திடம் இருந்து வாங்கிய ZU-23 விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை தற்போது மேம்படுத்த விரும்புகிறது. இதற்கான ஒப்பந்தத்தை லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் வென்றுள்ளது. இதன்படி இந்த துப்பாக்கி நவீனமயமாக்கப்பட்டு தானியங்கி முறையில் இயங்கும் வகையில் மேம்படுத்த படும். மேலும் நவீன மின்னனு சாதனங்கள் இணைக்கப்பட்டு, எக்கால சூழலிலும் இயங்கும் வகையிலும், எளிதில் பராமரிக்க வசதியாகவும் மறுசீரமைப்பு செய்யப்படும். இந்த ஒப்பந்தம் 400 முதல் 1000 கோடிகளுக்கு இடையிலான மதிப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

இந்தியா தயாரிக்க போகும் உலகின் முதல் 5.5ஆவது தலைமுறை அதிநவீன போர்விமானம் !!

April 5, 2020

இந்தியா AMCA எனும் அதிநவீன ஸ்டெல்த் விமானத்தை உருவாக்த உள்ளது பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் தற்போது வரை 5ஆம் தலைமுறை விமானமாக கருதப்பட்டு வந்த நிலையில் சில தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இது உலகின் முதல் 5.5 ஆவது தலைமுறை விமானம் ஆகிறது. RCS – Radar Cross Section, DSI – Diverterless Supersonic Intake என்ற இரு தொழில்நுட்பங்களால் தற்போதுள்ள 5ஆம் தலைமுறை விமானங்களை விட ரேடாரில் சிக்காத […]

Read More

COVID19 பிரம்மாஸ் ஏவுகணை சோதனை நிறுத்தம் !!

April 5, 2020

கொரோனா தொற்று தற்போது நாட்டில் தீவிரத்தன்மை அடைந்துள்ள நிலையில் தாக்குதல் வரம்பு அதிகரிக்கப்ட்ட பிரம்மாஸ் ஏவுகணையின் (BRAHMOS ER) சோதனையை DRDO நிறுத்தியுள்ளது. இந்தியா தற்போது ஏவுகணை தொழில்நுட்ப கட்டுபாட்டு அமைப்பில் (Missile Technology Control Regime – MTCR) உறுப்பு நாடாக இணைந்துள்ளதால் தற்போது கூட்டுதயாரிப்பு ஏவுகணைகளின் வரம்பை அதிகரிக்க முடியும். அந்த வகையில் பிரம்மாஸ் ஏவுகணையின் 290கிமீ செல்லும் ரகம் சுமார் 400கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 500கிமீ ரகம் 600கிமீ செல்லும் வகையில் […]

Read More

சீனாவின் பெய்டோ தொழில்நுட்ப வசதியை பெறும் பாகிஸ்தான் ராணுவம் ??

April 4, 2020

வருகிற மே மாதம் சீனா தனது பெய்டோ வழிகாட்டி தொழில்நுட்பத்திற்கான கடைசியும் 54ஆவது செயற்கைகோளையும் ஏவ உள்ளது. அமெரிக்கா ஜிபிஎஸ், ரஷ்யா க்ளோனாஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கலிலியோ ஆகிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். நாமும் நாவிக் என்கிற தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம். இந்த பெய்டோ தொழில்நுட்பமானது வாகனங்கள், கப்பல்கள் , விமானங்கள், விவசாயம் மற்றும் வனத்துறை ஆகியவற்றிற்கு சேவை அளிக்கிறது. மேலும் ராணுவ சேவையையும் இதனால் வழங்க முடியும். சீன ராணுவம் பல வருடங்களாக தனது […]

Read More

ஏற்றுமதிக்கு தயாராகும் தேஜஸ்; விலை மலிவான நவீன ரகத்தை ஏற்றுமதி செய்ய திட்டம்

April 4, 2020

விலை மலிவான தேஜாஸின் ஏற்றுமதி ரகம் 2023ல் வெளிவருகிறது !! சமீபத்தில் HAL நிறுவனம் இந்திய விமானப்படைக்கு தயாரிக்க உள்ள 83 இலகுரக தேஜாஸ் விமானங்களின் விலையை முதலில் இருந்ததை விட பாதியாக குறைத்துள்ளது (ஒரு விமானத்தின் விலை 45 மில்லியன் அமெரிக்க டாலர்கள்). தற்போது வெளியாகி உள்ள சில தகவல்கள் படி , 2023ஆம் ஆண்டு தேஜாஸின் ஏற்றுமதி வடிவம் தயாராகும் என கூறப்படுகிறது. இது தற்போது உள்ள தேஜாஸ் மார்க்1 விமானத்தை விட சற்றே […]

Read More