அண்மை செய்திகள்

தேஜாஸ் போர் விமானத்தில் உள்ள வெளிநாட்டு தொழில்நுட்பங்களை குறைக்க முடிவு !!

January 19, 2021

இலகுரக தேஜாஸ் போர் விமானம் இந்தியாவின் மிக நீண்ட நாள் கனவு என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது 83 தேஜாஸ் போர் விமானங்களுக்கு இந்திய விமானப்படை ஆர்டர் கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேஜாஸ் போர் விமானத்தில் 80% இந்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதாவது தேஜாஸில உள்ள 344 அமைப்புகளில் 210 அமைப்புகள் இந்திய தயாரிப்பு ஆகும், 134 அமைப்புகள் வெளிநாட்டு தயாரிப்பு ஆகும். தற்போது வெளிநாட்டு அமைப்புகளை குறைத்து சுமார் 80% […]

Read More

60 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் பாலம் கட்டி முடித்து சோதனை !!

January 19, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பான் பகுதியில் உள்ள கேலா மோர் எனும் பகுதி வழியாக ஜம்மு ஶ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த பகுதியில் உள்ள பாலம் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்த நிலையில் ஒரு வாரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் எல்லையோர சாலைகள் அமைப்பிடம் இப்பாலத்தை சீர்செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டது. 60 மணி நேரத்திலேயே 110அடி நீளம் கொண்ட பாலம் நிர்மானிக்க பட்டு சோதனை ஒட்டமும் நிறைவு பெற்று போக்குவரத்து அனுமதிக்கபட்டு உள்ளது.

Read More

மார்ச் இறுதிக்குள் 5 தேஜாஸ் போர் விமானங்கள் டெலிவரி !!

January 19, 2021

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டியில், வருகிற மார்ச் மாத இறுதிக்குள் 5 தேஜாஸ் போர் விமானங்கள் விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும் எனவும், 2020-2021 நிதியாண்டு முடிவு பெறுவதற்கு முன்னர் மேலும் 2 விமானங்கள் டெலிவரி செய்யப்படும் என்றார். மேலும் பேசுகையில் 2021-22 நிதியாண்டில் 8 தேஜாஸ் போர் விமானங்களை டெலிவரி செய்ய திட்டம் உள்ளதாகவும் கூறினார். ஆனால் சில தகவல்களின் படி தற்போது இரண்டாவது தயாரிப்பு நிலையம் இயக்கத்தில் இல்லை […]

Read More

இந்திய ஃபிரெஞ்சு போர் பயிற்சிக்கு தயாராகும் ஜோத்பூர் தளம் !!

January 19, 2021

நைட் டெஸர்ட் என்ற பெயரில் இந்திய ஃபிரெஞ்சு விமானப்படைகள் இடையே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் போர் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக தற்போது ஜோத்பூர் விமானப்படை தளம் ஆயத்தமாகி வருகிறது, இந்திய விமானப்படை பயிற்சிக்கு தேவையான தளவாடங்களை ஜோத்பூர் தளத்தில் குவித்து வருகிறது. நமது விமானப்படையிற் சி17 விமானங்கள் மூலமாக தளவாடங்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.

Read More

தகுந்த காலத்தில் டெலிவரி செய்யவில்லை என்றால் HAL நிறுவனத்திற்கு அபராதம் !!

January 19, 2021

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர் மாதவன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி தகுந்த காலத்தில் டெலிவரி செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தோல்வி அடைந்தால் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். அதாவது ஒப்பந்த தொகையில் 10% ஆக அபராதம் விதிக்கப்படும் எனவும், அந்த காலத்தில் உள்ள பணவீக்கம் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது எனவும் கூறினார்.

Read More

டெசர்ட் நைட் 2021-இந்திய பிரான்ஸ் ரபேல்கள் கூட்டுப் பயிற்சி

January 19, 2021

இந்தியா மற்றும் பிரான்ஸ் விமானப்படைகள் இணைந்து ஜோத்பூரில் ஐந்து நாள் மாபெரும் போர்பயிற்சியில் ஈடுபட உள்ளன.இந்த பயிற்சியில் பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் ரபேல் விமானங்கள் கலந்து கொண்டு மிகக் கடினமான மேனுவர்களை பயிற்சி செய்து பார்க்க உள்ளன.இதன் மூலம் இந்திய ரபேல் விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு நல்ல அனுபவ பாடம் கிடைக்கும். டெசர்ட் நைட் 21 என இந்த பயிற்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.இந்திய சீனப் பிரச்சனை நடந்து வரும் வேளையில் இந்த போர்பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.இந்தியா தனது அனைத்து […]

Read More

காஷ்மீரில் வெடிகுண்டை கண்டுபிடித்த மோப்பநாய் !!

January 18, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடி கண்டுபிடிக்க பட்டது. நானு என்கிற ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மோப்பநாய் குப்வாரா பகுதியில் உள்ள லோன்ஹாரே சாலை ஒரத்தில் வெடிகுண்டை கண்டுபிடிக்க உதவியது. ராணுவ கான்வாய் செல்வதற்கு சற்று நேரம் முன்னர் கண்டுபிடிக்க பட்டதால் உயிர் சேதம் தவிர்க்க பட்டது.

Read More

ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கும் முயற்சியில் இந்தியா !!

January 18, 2021

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 21 மிக்29 மற்றும் 12 சுகோய்30 எம்.கே.ஐ போர் விமானங்களை வாங்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 12 சுகோய் 30 போர் விமானங்கள் அவற்றின் ஆயுத அமைப்புகள், உதிரி பாகங்கள் மற்றும் பிற சப்ளைகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக சுமார் 10,730 கோடி ருபாய் ஆகும். அதை போல 21 மிக்29 அவற்றிற்கான இதர சேவைகளுடன் சேர்த்து சுமார் 7,500 கோடி ருபாய் ஆகும் என கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே பயன்படுத்தி […]

Read More

ஏப்ரலில் 114 போர் விமானங்களை படையில் சேர்க்கும் திட்டத்தை துவங்க இந்தியா முயற்சி !!

January 18, 2021

இந்த ஆண்டு ஏப்ரல் மே மாத வாக்கில் இந்திய விமானப்படையின் நீண்ட நாள் திட்டமான 114 போர் விமானங்களை தயாரிக்கும் திட்டத்தை துவங்க முயற்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் சுமார் 114 போர் விமானங்களை தயாரிக்கும் மெகா திட்டமான இது பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த திட்டம் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு மிக்கது என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன .

Read More

விரைவுபடுத்தப்படும் ஈரான் சாபஹார் துறைமுக பணிகள் !!

January 18, 2021

ஈரானில் உள்ள சாபஹார் நகரில் இந்தியா ஒரு துறைமுகத்தை கட்டி வருகிறது, மந்தமாக நடைபெற்று வந்த இப்பணிகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. இந்தியா துறைமுகத்தில் சரக்குகளை கையாள பயன்படும் கிரென்களை சாபஹாருக்கு அனுப்பி உள்ளது.இத்தாலியில் இருந்த வாங்கப்பட்ட இந்த கிரென்கள் சாபஹார் சென்றடைந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த கருவிகளின் மொத்த மதிப்பு 8.5மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.இந்த கிரென்கள் ஒரு நாளைக்கு 15,000 டன்கள் அளவிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More