இராணுவம்

லடாக்கில் சீன ராணுவ வீரர் கைது !!

January 11, 2021

லடாக்கின் சுஷூல் செக்டாரில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் ஒருவர் இந்திய வீரர்களால் கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணைக்கு பின்னர் அவரை சீன ராணுவத்திடம் ஒப்படைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இப்படி பிடிபட்ட சீன வீரர் விசாரணைக்கு பின்னர் சீன படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

பாக்கிற்கு உளவு பார்த்த முன்னாள் இராணுவ வீரர்-கைது செய்த பாதுகாப்பு படை

January 9, 2021

பாக்கின் உளவு நிறுவனத்திற்கு முக்கியமாக தகவல்களை பகிர்ந்ததாக முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கராச்சியில் உள்ள ஒருவருக்கு முன்னாள் இராணுவ வீரர் சௌரப் சர்மா என்பவர் முக்கியத் தகவல்கள் அனுப்புவதாக லக்னோவில் உள்ள இராணுவ உளவுப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பின் ஆபரேசன் க்ராஸ் கனெக்சன் என்னும் பெயரில் அவரை இராணுவ உளவுப் பிரிவு கண்காணிக்க தொடங்கியுள்ளது.கடந்த நான்கு வருடங்களாக அவர் பாக் உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியது பின்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜீன் […]

Read More

காஷ்மீரில் சுமார் 3கிமீ தூரம் பனியில் சுமந்து சென்று தாயையும் சேயையும் வீட்டில் சேர்த்த ராணுவத்தினர் !!

January 8, 2021

ஜம்மு காஷ்மீர் மாநிலம் துனிவார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் பிரசவத்திற்காக பஸல்போரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பிரசவம் முடிந்து குழந்தை பிறந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக வீட்டுக்கு செல்ல முடியாமல் இருந்தார். இதையடுத்து ராணுவத்தினர் பஸல்போராவில் இருந்து துனிவார் வரை சுமார் 3.5 கிமீ அந்த பெண்ணையும் அவரது குழந்தையையும் சுமந்து சென்று பத்திரமாக வீடு சேர்த்தனர்.

Read More

ராஜஸ்தானில் பயிற்சியின் போது பாரா சிறப்பு படை அதிகாரி மரணம் !!

January 7, 2021

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்திய தரைப்படையின் சிறப்பு படையின் 10ஆவது பாரா சிறப்பு படை பட்டாலியன் இயங்கி வருகிறது. இங்கு 10ஆவது பாரா சிறப்பு படை வீரர்கள் பாலைவனம், நீர்நிலைகளில் சிறப்பு பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது 4 வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கெய்லானா ஏரியில் குதித்தனர். மூன்று வீரர்கள் வெளிவந்த நிலையில் நான்காவதாக குதித்த கேப்டன் பதவி வகிக்கும் அதிகாரி மாயமாகி உள்ளார். அவரை தேடும் பணி […]

Read More

பிரம்மாஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகள் ஏற்றுமதிக்கான நாடுகளின் பட்டியல் !! 

January 7, 2021

இந்தியா சமீப காலமாக தனது ஆயுத தேவையை உள்நாட்டு தயாரிப்புகளை கொண்டு பூர்த்தி செய்வதிலும், அந்த தளவாடங்களை ஏற்றுமதி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் பிரம்மாஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான நாடுகளின் பட்டியலை தயாரித்து உள்ளது. பிரம்மாஸ்: ஃபிலிப்பைன்ஸ் மிக நீண்ட காலமாகவே ஆர்வம் காட்டி வந்த நிலையில் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதை தவிர இந்தோனேசியா வியட்நாம் ஐக்கிய அரபு அமீரகம் […]

Read More

ஒரே நாளில் காஷ்மீரில் நோயாளி மற்றும் கர்ப்பிணி பெண்களை பனிப்பொழிவில் இருந்து மீட்ட ராணுவ வீரர்கள் !!

January 7, 2021

திரு. மொஹமது தார் என்பவர் தனது மனைவி கடுமையான ஆஸ்துமா நோயாளி அவரை மருத்துவமனை கொண்டு செல்ல உதவுமாறும் ராணுவத்தை கேட்டு கொண்டார் அதன்படி ராணுவத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தவிர மூன்று கர்ப்பிணி பெண்களை ராணுவ வீரர்கள் மீட்டு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் பத்திரமாக ராணுவத்தினர் சேர்த்தனர். திரு. குலாம் மீர் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பனிப்பொழிவில் சிக்கிய தனது மகளை மீட்குமாறு கோரிக்கை வைத்தார் இதனையடுத்து ராணுவத்தினர் விரைந்து சென்று […]

Read More

அதிநவீன வாகனங்களை தரைப்படைக்கு வழங்க BEML நிறுவனத்துடன் ஒப்பந்தம் !!

January 7, 2021

BEML என்பது புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்பது தெரிந்ததே, இந்த நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. அந்த ஒப்பந்தத்தின் படி இந்திய தரைப்படைக்கு சுமார் 758கோடி ருபாய் செலவில் அதிநவீன அதிக திறன் வாய்ந்த லாரிகளை தயாரித்து வழங்க வேண்டும். இந்த வாகனங்கள் கவச வாகனங்கள், வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் சப்ளைகளை எல்லைக்கு மிக கடினமான நிலப்பரப்பிலும் சுமக்கும் வகையில் இருத்தல் வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.

Read More

காலக்கெடுவுக்கு நான்கு மாதங்கள் முன்னரே 1 லட்சம் குண்டு துளைக்காத கவசங்களை பெறும் ராணுவ வீரர்கள் !!

January 7, 2021

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 1.8 லட்சம் அதிநவீன குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசங்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை எஸ்.எம்.பி.பி நிறுவனத்திற்கு வழங்கி இருந்தது. இந்த நிலையில் எஸ்.எம்.பி.பி நிறுவனம் சுமார் 1 லட்சம் குண்டு துளைக்காத கவசங்களை முதல் தொகுதியாக நான்கு மாதங்கள் முன்னரே டெலிவரி செய்ய துவங்கி உள்ளது. இந்த கவசங்கள் மிகவும் ஆபத்தான ஏகே47ன் ஸ்டீல் கோர் புல்லட்களை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சியாச்சின் ஹீரோ நாய்ப் சுபேதார் பானா சிங்

January 6, 2021

இந்தியாவில் தற்போது பரம்வீர் சக்ரா பெற்று உயிர்வாழும் மூன்று ஹீரோக்களில் பானா சிங் அவர்களும் ஒருவர்.1987 சியாச்சின் போரில் அவரது பங்கு அளப்பரியது. சியாச்சின் இந்தியாவிற்கு இன்றியமையாதது.எந்த விலையும் அதற்கு பெரிதல்ல- ஹானரி கேப்டன் பானா சிங் காரகோரம் மலைத்தொடரின் மேலே சியாச்சின் கிளாசியர் அமைந்துள்ளது.இரு ட்ரில்லியன் கியூபிக் அடி ஐஸ் உடன் உலகின் மிகப்பெரிய அல்பைன் கிளாசியராக சியாச்சின் உள்ளது. உலகின் அதிக உயர மற்றும் அதிக குளிர் உடைய போர்க்களம் சியாச்சின் தான்.இங்கு -52டிகிரி […]

Read More

எல்லையில் டாங்கிகளை குவித்துள்ள சீனா அதிகரிக்கும் பதற்றம் !!

January 4, 2021

எல்லையில் சமாதானம் என பேசிக்கொண்டு மறுபக்கம் சீனா அடாவடி செய்துவருவது மீண்டும் நிருபனம் ஆகியுள்ளது. ரேசாங் லா, ரெச்சின் லா மற்றும் முகோஸ்ரீ உள்ளிட்ட இடங்களில் சீன ராணுவம் டாங்கிகளை குவித்துள்ளது. இந்த நடவடிக்கை சீனாவின் மறைமுக மண்ணாசையை வெளிபடுத்துகிறது.

Read More