போர்க்கப்பலில் இருந்து இயக்கப்படும் ட்ரோன்கள் வாங்க அனுமதி

  • Tamil Defense
  • January 2, 2021
  • Comments Off on போர்க்கப்பலில் இருந்து இயக்கப்படும் ட்ரோன்கள் வாங்க அனுமதி

போர்க்கப்பலில் இருந்து இயக்கப்படும் ட்ரோன்கள் வாங்க அனுமதிஇந்திய பெருங்கடல் பகுதியில் செயல்பட்டு வரும் முன்னனி போர் கப்பலில் இருந்து இயக்குவதற்காக 10 ஆளில்லா கண்காணிப்பு ட்ரோன்களை பெற முயற்சித்து வந்தது இந்திய கடற்படை.தற்போது இந்த ட்ரோன்களை பெற அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியையும் அதன் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக இந்திய கடற்படைக்கு 10 கப்பலில் இருந்து இயக்கப்படக்கூடிய ட்ரோன்களை வாங்க இந்திய அரசாங்கம் ஒப்புதலைப் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 10 ஆளில்லா கண்காணிப்பு ட்ரோன்களை வாங்க இந்திய கடற்படைக்கு 1300 கோடி மத்திய அரசு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த ட்ரோன்கள் இந்திய கடற்படையின் முன்னனி போர்க்கப்பலில் இருந்து செயல்படும். மேலும் இது கடற்பகுதியை சுற்றியுள்ள விரோதிகளை கண்காணிக்க பெரிதும் உதவும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இந்திய பெருங்கடலை கண்காணிக்க
அமெரிக்காவிடம் இருந்து இரண்டு
பிரிடேட்டர் ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது 30 மணி நேரத்திற்கும் மேலாக கண்காணிக்கும் திறன் கொண்டது. இந்த ட்ரோன்கள் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் ராஜாளி விமான நிலையத்திலிருந்து இயங்குகின்றன. மேலும் மடகாஸ்கரில் இருந்து மலாக்கா நீரினை வரை கண்காணிப்பை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து சீ கார்டியன் ட்ரோன்களை வாங்குவதற்கான இந்திய கடற்படை முயற்சித்து வருகிறது.

ஏற்கனவே இந்திய கடற்படை இதுபோன்ற ட்ரோன்களை பெற முயற்சித்து சில ட்ரோன்களை சோதனையும் செய்தது.சீனா தற்போது தான் இதுபோன்ற ட்ரோன் ஒன்றை மேம்படுத்தியுள்ளது.ஏஆர்500சி எனும் ட்ரோனை சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பு பணிகளுக்காக இந்திய கடற்படை தற்போது காமோவ்-31 வானூர்திகளை பயன்படுத்தி வருகிறது. இந்த ஆளில்லா ட்ரோன்களும் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.