Breaking News

இந்தியாவுக்கு அதிகசக்தி வாய்ந்த என்ஜின்களை வழங்க முன்வந்த ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் !!

  • Tamil Defense
  • January 25, 2021
  • Comments Off on இந்தியாவுக்கு அதிகசக்தி வாய்ந்த என்ஜின்களை வழங்க முன்வந்த ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் !!

இந்தியா தனது கடற்படைக்காக விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து பயன்படுத்தும் வகையிலான 26டன்கள் எடை கொண்ட போர் விமானத்தை உருவாக்க உள்ளது.

இந்த விஷயம் அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் (general electric )கவனத்தை ஈர்த்துள்ளது

ஏற்கனவே 84கிலோ நியுட்டன் திறன் வெளிபடுத்தும் F404-GE-IN20 ரக என்ஜின்களை 83 தேஜாஸ் விமானங்களுக்கு வழங்க முன்வந்த நிலையில்

தற்போது 116கிலோ நியுட்டன் திறன் வெளிபடுத்தும் F414-GE-400 ரக என்ஜின்களை கடற்படை விமானத்திற்கு வழங்க முன்வந்துள்ளது.

இந்த என்ஜின் தேஜாஸ் மார்க்2, கடற்படைக்கான TEDBF விமானம், ஆம்கா மார்க்1 மற்றும் ஆம்கா மார்க்2 ஆகிய விமானங்களுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது.