Day: January 25, 2021

தரைப்படையில் அதிகாரியாக இணைய உள்ள வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி !!

January 25, 2021

கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காயமடைந்து 40 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றும் வீரமரணம் அடைந்த வீரர் நாயக். தீபக் நைன்வால். இவரது மனைவி ஜோதி நைன்வால் ஆவார், கணவர் இறந்த பின்னர் தளராமல் இரண்டு வருடங்கள் கடினமாக உழைத்து ராணுவ அதிகாரிக்கான தேர்வில வெற்றி பெற்றுள்ளார். இரு குழந்தைகளையும் பெற்றோரிடம் விட்டுவிட்டு வருகிற ஜனவரி 30ஆம் தேதி சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக இணைய […]

Read More

இந்தியாவுக்கு அதிகசக்தி வாய்ந்த என்ஜின்களை வழங்க முன்வந்த ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனம் !!

January 25, 2021

இந்தியா தனது கடற்படைக்காக விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து பயன்படுத்தும் வகையிலான 26டன்கள் எடை கொண்ட போர் விமானத்தை உருவாக்க உள்ளது. இந்த விஷயம் அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் (general electric )கவனத்தை ஈர்த்துள்ளது ஏற்கனவே 84கிலோ நியுட்டன் திறன் வெளிபடுத்தும் F404-GE-IN20 ரக என்ஜின்களை 83 தேஜாஸ் விமானங்களுக்கு வழங்க முன்வந்த நிலையில் தற்போது 116கிலோ நியுட்டன் திறன் வெளிபடுத்தும் F414-GE-400 ரக என்ஜின்களை கடற்படை விமானத்திற்கு வழங்க முன்வந்துள்ளது. இந்த என்ஜின் தேஜாஸ் மார்க்2, […]

Read More

துருக்கி பாக் கூட்டணிக்கு எதிராக இந்தியா க்ரீஸ் இடையில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் : க்ரிஸ் எம்.பி !!

January 25, 2021

சமீபத்தில் இந்தியா மற்றும் க்ரிஸ் இடையிலான ஒத்துழைப்பு குறித்த வெபினார் ஒன்று தில்லியில் உள்ள ரெட் லான்டர்ன் அனாலிடிகா எனும் அமைப்பால் நடத்துப்பட்டது. இதில் இந்தியா சார்பில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக துணை பேராசிரியர் முனைவர். வந்தனா மிஷ்ரா மற்றும் க்ரீஸை சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய எம்.பி. இம்மானிய்ல் ஃப்ராக்கோஸ், க்ரிஸ் செய்திதாளான பென்டாஸ் போஸ்டாகாமாவின் ஆசிரியர் ஆண்ட்ரியாஸ் மோன்ட்ஸூருலியாஸ் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். அப்போது முனைவர். வந்தனா பேசுகையில் பல நூற்றாண்டுகளாக இந்தியா மற்றும் […]

Read More

இந்தியாவின் முதல் இலகுரக விமானமான தேஜாஸின் கதை !!

January 25, 2021

1981ஆம் ஆண்டு இந்தியா தனது மிக்21 விமானங்களுக்கு மாற்று வேண்டும் என்பதை உணர்ந்தது. காரணம் 1990களில் ஆரம்பம் அல்லது மத்தியில் மிக்21 விமானங்கள் காலாவதி ஆகிவிடும். உடனடியாக இந்தியாவிலேயே மாற்று விமானம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது .அதற்கு முன்னர் மாருட் என்கிற விமானம் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அப்போது அதன் தயாரிப்பு நிறுவனம் கடையை சாத்திவிட்டது.. என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்த நிலையில் அரசு ADA அமைப்பை இதற்கு பணித்தது. ஆனால் தகுந்த விஞ்ஞானிகள் இல்லை. அந்த […]

Read More

அந்தமானில் கவாச் போர்பயிற்சி முப்படைகளும் பங்கேற்பு !!

January 25, 2021

அந்தமான் தீவுகளில் முப்படைகளும் கடலோர காவல்படையும் பங்கேற்ற கவாச் எனும் போர்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிகளில் நிலநீர் போர்முறை, வான்வழி மற்றும் கடல்வழி தாக்குதல், கண்காணிப்பு, நீர்மூழ்கி தாக்குதல் ஆகியவை செய்து பார்க்கப்பட்டது. இந்த பிரமாண்ட பயிற்சியில் ஜாகுவார் விமானங்கள், கடற்படை கார்வெட்கள் உள்ளிட்ட தளவாடங்கள் பங்கு பெற்றன. இந்த பயிற்சிகள் படைகளிடையே ஒருங்கிணைப்பை அதிகபடுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சிக்கிமில் இந்திய சீன படைகள் மோதல் !!

January 25, 2021

சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையோரம் மூன்று நாட்களுக்கு முன்பு இந்திய சீன வீரர்கள் மோதல் நடைபெற்றுள்ளது. சீன ரோந்து குழு இந்திய எல்லையில் அத்துமீறிய போது இந்த மோதல் நிகழ்ந்து உள்ளது. இதில் இந்திய வீரர்கள் ஒரு சிலரும், சீன வீரர்கள் ஒரு சிலரும் காயமடைந்து உள்ளனர் மேலும் தற்போது நிலைமை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.

Read More

இராணுவத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்சில்கா அமைப்பு

January 25, 2021

ZSU-23-4 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவின் பெல் (Bharat Electronics Limited) நிறுவனம் புதுப்பித்துள்ளது.அதில் மிக முக்கியமாக கருதப்படுவது பழைய RPK 2 ரேடாருக்கு பதிலாக புதிய 3D Active Phased Array Radar ரேடார் பொருத்தப்பட்டுள்ளது தான். Electronic Counter-Measure நிலையில் கூட ஸ்சில்கா எதிரி இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து கண்காணிக்க கூடியது.அனைத்து கால நிலைகளிலும் இரவு பகல் பொழுதுகளிலும் கூட இலக்கை வெற்றிகரமாக தாக்கியழிக்க கூடியது ஆகும். குறைந்த அளவிலான டீசலை உட்கொள்ளும் அளவிற்கு […]

Read More

மார்ச்சிற்குள் 3 தாக்கும் வானூர்திகள் டெலிவரி செய்ய திட்டம்

January 25, 2021

மார்ச் மாத இறுதிக்குள் HAL நிறுவனம் மூன்று இலகு ரக தாக்கும் வானூர்தியை விமானப்படைக்கு டெலிவரி செய்ய உள்ளது. ஹால் நிறுவனம் தற்போது இலகு ரக வானூர்தியை லிமிடெட் சீரியல் தயாரிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.தற்போது 15 வானூர்திகளை மட்டும் ஹால் நிறுவனம் தயாரிக்கும்.இதில் முதல் மூன்று வானூர்திகள் மார்ச் 31க்குள் டெலிவரி செய்யப்பட உள்ளது. இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துள்ள வானூர்தி தான் இந்த இலகு ரக தாக்கும் வானூர்தி ஆகும். Light combat […]

Read More