Breaking News

Day: January 17, 2021

இந்திய பெருங்கடல் பகுதியில் ஏவுகணை சோதனை செய்த ஈரான் !!

January 17, 2021

இந்திய பெருங்கடல் பகுதியில் 1800கிமீ வரம்பு கொண்ட பலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை ஈரான் செய்துள்ளது. இந்த போர் ஒத்திகையில் எதிரி கடற்படை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையிலான பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக முக்கிய ஈரான் ராணுவ தளபதி தெரிவித்தார். ஈரானிய ராணுவ தலைமை தளபதி முன்னிலையில் இந்த பயிற்சி நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

தரையை ஊடுருவி பார்க்கும் ரேடார்களை எல்லையில் பயன்படுத்தி வரும் தரைப்படை !!

January 17, 2021

இந்திய தரைப்படையின் சினார் கோர் படைப்பிரிவு பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளை கண்காணித்து வருகிறது.இந்த நிலையில் சினார் கோர் படையின் தலைமை கட்டளை அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் பி எஸ் ராஜூ சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எல்லை கட்டுபாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ஆயுதங்கள் மற்றும் போதை மருந்துகளை டாரோன் மற்றும் நிலத்தடி சுரங்கம் வழியாக கடத்த முயற்சிக்கிறது. ஆகவே தற்போது தரையை ஊடுருவி பார்க்கும் ரேடார் போன்ற அதிநவீன கருவிகளை தரைப்படை பயன்படுத்தி வருவதாக அவர் […]

Read More

கொரோனா தடுப்பூசிகளை தனது முன்கள பணியாளர்களுக்கு செலுத்தும் ராணுவம் !!

January 17, 2021

நேற்று நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.இதில் முப்படைகளும் பங்கேற்றுள்ளனர், ராணுவத்தின் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 3300க்கும் அதிகமான ராணுவ மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் நர்சிங் அசிஸ்டென்டுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.இந்திய தரைப்படையில் சுமார் 3,129 பேருக்கு தடுப்பூசி இடப்பட்டு உள்ளது, விமானப்படையை பொறுத்தவரை சரியான எண்ணிக்கை வெளியாகவில்லை. கடற்படையை பொறுத்தவரை 250 பேருக்கு தடுப்பூசி இடப்பட்டு உள்ளது. மும்பை ஐ.என்.ஹெச்.எஸ். அஸ்வினி கடற்படை […]

Read More

சீன சர்வே கப்பலை தனது எல்லையை விட்டு வெளியேற்றிய இந்தோனேசிய கடலோர காவல் படை

January 17, 2021

சீன சர்வே கப்பலான ஜியாங் யோங் ஹோங் 3 இந்தோனேசிய கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளது. அதன் ட்ராக்கர் கருவியும் அடிக்கடி அணைவதும் திரும்ப செயல்படுவதும் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில்,இந்தோனேசிய கடலோர காவல்படை விரைந்து சென்று இந்தோனேசிய கடல் எல்லையில் இருந்த சீன கப்பலை வெளியேற்றியது. இந்தோனேசியாவுக்கு சொந்தமான பகுதிகளை சீனா உரிமை கோருவதும், மீன்படி படகுகளை தனது கடலோர காவல்படை துணையுடன் அத்துமீற வைப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

Read More