
அமெரிக்காவின் DARPA – Defense Advanced Research Projects Agency போர்க்களத்தில் பயன்படுத்தும் வகையிலான சில ஆளில்லா விமான திரள் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது என பெண்டகனின் கொள்முதல் பிரிவு தலைவர் எல்லன் லார்ட் கூறினார்.
அதில் ஒரு திட்டம் இந்திய விமானப்படையின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக இந்திய விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப்படை இத்தகைய திட்டங்களை இணைந்து மேற்கொள்வதை பற்றி விவாதித்து உள்ளன.
இதன்படி குறைந்த செலவில் நமது சி130ஜெ மற்றும் சி17 விமானங்களிலிருந்து ஏவப்பட்டு பின்னர் அந்த விமானங்களிலேயே நிலை நிறுத்தப்படும் வகையிலான ஆளில்லா விமான திரள் தொழில்நுட்பமாகும்.
ஒரு சி130ஜெ விமானத்தில் இருந்து நான்கு ஜெட் என்ஜின் சக்தி கொன்ட ட்ரோன்களை ஏவ முடியும் பின்னர் அதே விமானங்களில் கேபிள் மற்றும் கிரேன் போன்ற அமைப்பின் மூலம் ஏவப்பட்ட விமானங்களை திரும்ப பெற முடியும்.
இதன் மூலம் தகவல் தொடர்பு, இலக்குகள் கண்காணிப்பு மற்றும் குறிவைப்பு ஆகியவற்றை சிறப்பாக செய்ய முடியும்.
இந்த வருடத்தில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் அமெரிக்க விமானப்படையின் ஆய்வகமும் இதற்கான பேச்சு வார்த்தைதளை நடத்த உள்ளது.